விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் அப்போவே சொன்னேன்.. விழா எடுத்துடலாம்னு.. எடப்பாடியார்தான் கேக்கலை.. "மாஜி" ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

விருதுநகர்: நான் அப்போவே சொன்னேன், எடப்பாடி பழனிசாமிதான் கேட்கவில்லை என விருதுநகரில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் அதிமுக பொது கூட்டம் நடந்தது. இதில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் திமுக ஆட்சியில் அகம்பாவம் இருக்கிறது. யாராவது ஆட்சியை கேள்வி கேட்டாலே பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்.

நான் கேட்கிறேன் இது என்ன ராஜபக்சேவின் ஆட்சியா நடக்கிறது? எல்லாரையம் மிரட்டி பார்க்க நினைத்தால் எப்படி. அப்போ எல்லாரையும் பிடிச்சி உள்ள போடுவாங்களா, இல்லை மிரட்டினால் பணிந்துதான் போவார்களா?

எத்தனை நாட்கள்தான் இந்த திமுக ஒருவரை பிடித்து ஜெயில்ல அடைக்க முடியும். பணக்காரர்களை பார்த்து எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கவில்லை. ஏழைகள், பாட்டாளி மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இயக்கம்.

இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்! இதென்ன புதுக்கதை.. 'இடைத்தேர்தல்?’ - எடப்பாடி போடும் 'மாஸ்டர்' பிளான்.. க்ளூ கொடுத்த உதயகுமார்!

விருதுநகர்

விருதுநகர்

விருதுநகரில் நான் அமைச்சராக இருந்த போதுதான் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தேன், கலை கல்லூரி, அருப்புக்கோட்டை, சிவகாசியில் தலா ஆர்டிஓ அலுவலகம், சாத்தூரில் கோட்டாட்சியர் அலுவலகம், வத்திராகுடியிருப்பில் வட்டாட்சியர் அலுவலகம் என எத்தனையோ கொண்டு வந்தோம்.

 11 மருத்துவக் கல்லூரிகள்

11 மருத்துவக் கல்லூரிகள்

இப்படி திமுக என்ன கொண்டு வந்தது என கூறட்டும் பார்ப்போம். விருதுநகரில் அரசு மருத்துவமனைக்கும் நான்தான் பூமி பூஜை போட்டேன். எல்லாத்தையும் இப்படி நாங்க பாரத்து கட்டினோம். 11 மருத்துவக் கல்லூரிகள், மேற்கண்ட அலுவலகங்கள் அதிமுக ஆட்சியில் நம் காலத்தில் கட்டப்பட்டது என ஒரு கல்வெட்டை வச்சிடலாம்னு எடப்பாடி பழனிசாமிகிட்ட தேர்தல் நடக்க 2 மாசத்துக்கு முன்னாடியே சொன்னேன்.

 10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

ஆனால் அவரோ இப்போது வேண்டாம், அடுத்ததும் நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம். அப்போது நல்லா பிரம்மாண்டமா ஒரு விழாவை எடுத்து பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைப்போம்னு சொல்லி என் பேச்சை அவர் கேட்கவில்லை. 10 வருஷம் அதிமுக ஆட்சி இருக்கு, மக்கள் மாற்றத்தை விரும்பிவிட்டால் நாம் கொண்டு வந்ததற்கு கெல்லாம் வேறு யாராவது பலனை எடுத்துக் கொள்வார்கள் என்றேன். நான் சொன்ன மாதிரியே இன்று பாருங்கள் நாம் கட்டினதுக்கெல்லாம் திமுக சொந்தம் கொண்டாடுறாங்க.

2021 சட்டசபை தேர்தல்

2021 சட்டசபை தேர்தல்


நானும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டேன். என்னை தோற்கடிக்க திமுக ஒரு டீமையே இறக்கியது. மாற்றம் வேண்டும் என நினைத்து மக்கள் வோட்டு போட்டார்கள். ஆனால் இன்று ஏமாந்து நிற்கிறார்கள். நீட் தேர்வை ஒழித்துவிட்டார்களா, முதல் கையெழுத்தே அதுதான் என்றார்களே. இவ்வாறு ராஜேந்திர பாலாஜி பேசினார்.

English summary
Ex Minister K.T.Rajendra Balaji says that Dmk Government should first get exemption from Neet Exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X