விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பவே ஆரம்பிச்சிருந்தா... ரஜினி நல்லாயிருந்திருப்பாரு.. ராஜேந்திர பாலாஜி ஆதங்கம்

Google Oneindia Tamil News

விருதுநகர்: 1996-ஆம் ஆண்டே ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கமல் கட்சி ஒரு தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும்.

மு. க.ஸ்டாலின் முதல்வர் என்பது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு ஆகும். அவர் முதல்வராக முடியாது. 1996-ஆம் ஆண்டு ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் நல்ல வாய்ப்பு அமைந்திருக்கும்.

[இத்தனை செல்வாக்கு இருந்தாலும் மக்கள் ஆதரவு இவருக்கு மட்டும் குறைவது ஏன்?]

காலம் கடந்தது அல்ல

காலம் கடந்தது அல்ல

ரஜினி நல்ல மனிதர், அவர் அரசியலில் களம் இறங்குவது சந்தேகமாக இருக்கிறது. பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் மீண்டும் இணைய அழைப்பது காலம் கடந்த செயல் அல்ல.

அழியாது

அழியாது

தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். நாளை தேர்தல் நடத்தினாலும் நாங்கள் சந்திக்க தயார். அதிமுக புனிதன் தோன்றிய கட்சி இது மறைவது, அழிவது போல் தெரியும் ஆனால் அழியாது என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

குணத்துக்கு ஒத்து வராது

குணத்துக்கு ஒத்து வராது

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோட்டைபட்டியில் செய்தியார்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் ரஜினி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரது வயதுக்கும் குணத்துக்கும் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது.

அரசியலில் ஈடுபடாததே நல்லது

அரசியலில் ஈடுபடாததே நல்லது

ரஜினி ஒரு வெகுளி. அவரது குணமும், வயதும் அரசியலுக்கு சரிப்பட்டு வராது. அரசியலுக்கு வர சித்து விளையாட்டுகள் தெரிந்திருக்க வேண்டும். வயதை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினி அரசியலில் ஈடுபடாமல் இருப்பது நல்லது என்றும் அமைச்சர் கடந்த ஆண்டு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Minister Rajendra Balaji says that Rajini would have started Political party in the year of 1996, then he would get good chance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X