விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிளகு ரசம், பூண்டு ரசம்.. கல்ப்பா அடிங்க.. சும்மா கொரோனா ஓடி போய்ரும்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: மிளகு ரசம் சாப்பிட்டால் கொரோனா போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

கொரோனா வந்தாலும் வந்தது ஆளாளுக்கு மருத்துவம் படிக்காமலேயே விஞ்ஞானி போல் மருந்து கண்டுபிடிக்கிறார்கள். வட மாநில பாஜக தலைவர்களோ மாட்டு கோமியத்தை குடித்தால் கொரோனா செத்து போய்டும் என்கிறார்கள்.

சிகப்பு எறும்பை அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால் கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் அண்டாது என வாட்ஸ் ஆப்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

 கொரோனா தடுப்பூசி போட்டால்.. 28 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டால்.. 28 நாட்களுக்கு

சோப்பு

சோப்பு

அது போல் ஊதுவத்தியிலிருந்து சோப்பு பேஸ்ட் வரை அனைத்தையும் மாட்டு கோமியத்தில் தயார் செய்தால் கொரோனா வராது என்கிறார்கள். ஆனால் எப்போதும் பரபரப்பான தகவலை சொல்லி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தற்போது ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

டில்லி இணையானது மல்லி

டில்லி இணையானது மல்லி

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அம்மா மினி கிளீனிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில் இப்போது அமைந்திருக்கும் அம்மா மினி கிளீனிக்கு பகுதியான மல்லி, டில்லி இணையான பகுதியாகும். இந்த கிளீனிக் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காகவே அமைந்திருக்கிறது.

பூண்டு ரசம்

பூண்டு ரசம்

மிளகு ரசம், பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டு விட்டு ஒரு கிளாஸ் அல்லது அரை கிளாஸ் ரசத்தை குடித்தால் கொரோனா வைரஸ் போய்விடும். சுக்கு ரசத்தையும் குடிக்கலாம். சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை.

இருமல்

இருமல்

சளி, இருமல் இருந்தால் யாரும் பயப்பட வேண்டாம். அருகிலேயே மருத்துவமனை இருக்கிறது. நடந்தே மருத்துவமனைக்கு வந்துவிடலாம். உறவினர்கள் வீட்டுக்குச் செல்வது போல் மருத்துவமனைக்கும் எந்த தயக்கமும் இன்றி பொது மக்கள் வந்து கொரோனா உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் உடல் உபாதைகளுக்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

English summary
Minister Rajendra Balaji says that Rasam is the best medicine to cure Corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X