விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சோதனை மேல் சோதனை... சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் ரூ.1.50 கோடி பணத்தோடு, தபால் ஓட்டும் பறிமுதல்- வீடியோ

    விருதுநகர்: சாத்தூர் அருகே எதிர்கோட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் பணப்பட்டுவாடா செய்ய வைக்கப்பட்டிருந்ததாக ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மாலையில் ரூ.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு, பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், அங்கு சென்றனர்.

    அப்போது, அலுவலகத்திற்குள் நுழைய அமமுக தொண்டர்கள் நுழைய அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு வரை சென்றதால் போலீசார் வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அமமுக அலுவலகம்

    அமமுக அலுவலகம்

    இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்து 1.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அருகே இருந்தவர்கள் 5 லட்சம் வரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டதாகவும் சொல்லப்பபடுகிறது.

    இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

    தங்க தமிழ்ச்செல்வன் பதில்

    தங்க தமிழ்ச்செல்வன் பதில்

    இதுகுறித்து பேசிய, தேனி நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர், தங்க தமிழ்ச் செல்வன், ஆண்டிபட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி பணம் அ.ம.மு.க.வுக்கு சொந்தமானது இல்லை என்று பதிலளித்தார்.

    ரூ.43 லட்சம் பறிமுதல்

    ரூ.43 லட்சம் பறிமுதல்

    இந்தநிலையில், சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியனின் தேர்தல் அலுவலகத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலையில் அவரது தோட்டத்திலிருந்து ரூ.33 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், மகாதேவன் என்பவரை கைது செய்துள்ளனர்.

    சோதனை மேல் சோதனை

    சோதனை மேல் சோதனை

    தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக, அமமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக 6 பேர் சிக்கினர்; 2,000 ரூபாய் கட்டுகளுடன் பிடிபட்ட 6 பேரையும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

    English summary
    Raid : Rs.10 lakhs seized in Ammk office near sattur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X