விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி, எடப்பாடி, ராகுல்.. இவங்கெல்லாம் நிதி கொடுக்கறாங்கலாமே நிதி.. அது யார் பணம்?.. சீமான் நறுக்!

Google Oneindia Tamil News

விருதுநகர்: தேர்தலிலும் அரசியலிலும் மாற்றம் தேவை என விருதுநகர் பிரசாரத்தில் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசியல் வேண்டாம் என ஒதுங்கியிருப்பது தவறான நடைமுறையாகும். அரசியலிலும் தேர்தலிலும் மாற்றம் தேவை.

 தாமரையை பூக்க வைப்பாரா டாக்டர்.. சூரியனை உதிக்க செய்வாரா கவிஞர்.. அனல் பறக்கும் தூத்துக்குடி தாமரையை பூக்க வைப்பாரா டாக்டர்.. சூரியனை உதிக்க செய்வாரா கவிஞர்.. அனல் பறக்கும் தூத்துக்குடி

ஒரு கிலோ அரிசி

ஒரு கிலோ அரிசி

இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். நாங்கள் உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. பணத்துக்காக ஓட்டை விற்கக் கூடாது என வலியுறுத்தத்தான் வந்துள்ளோம். கருணாநிதி முதல்வராக இருந்த போது ஒரு கிலோ அரிசி ரூ.2-க்கு கொடுத்தார்.

இலவச கல்வி

இலவச கல்வி

5 ஆண்டுகளுக்கு பிறகுஒரு கிலோ அரிசி ரூ. 1 க்கு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதான் வளர்ச்சியா, இது வறுமையின் வளர்ச்சியாகும். இலவச கல்வி, இலவச தரமான மருத்துவம் வழங்குவோம்.

எண்ணிக்கை குறையும்

எண்ணிக்கை குறையும்

முதல்வரும், அமைச்சர்களும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். தரமான அரசு மருத்துவமனைகள் இருந்தால் மருந்துகள் வாங்குவது குறையும். தரமான மருந்துகள் வழங்கப்பட்டால் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் குறையும்.

ரூ 2 ஆயிரம்

ரூ 2 ஆயிரம்

பிரதமர் மோடி ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்குவேன் என்று கூறுகிறார். தமிழக அரசு ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்று கூறுகிறது. ராகுல்காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவோம் என்று கூறுகிறார். இது யார் பணம். ஏழை மக்களின் பணம்தானே என்று கேட்டார் சீமான்.

English summary
Seeman Criticises Rahul, Modi and Edappadi Palanisamy for their announcement of fund in their manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X