விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரள வெள்ளம், கஜா புயல்.. அனைத்துக்கும் தெய்வ குற்றமே காரணம்- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரள வெள்ளம், கஜா புயல் அனைத்துக்கும் காரணம் என்ன ?- சொல்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

    ஸ்ரீவில்லிபுத்தூர்: சபரிமலை விவகாரத்தில் ஒன்றுபடாவிட்டால் இந்துக்கள் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றும் கேரள வெள்ளம் மற்றும் கஜா புயல் ஆகியவற்றுக்கு தெய்வ குற்றமே காரணம் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துவிட்டது. இதையடுத்து ஐப்பசி மாத நடைத் திறப்புக்கு சென்ற பெண்கள் சன்னிதானத்தை அடைய ஒரு சில மீட்டர்கள் இருந்த நிலையில் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

    சபரிமலை தொடர்பாக ஏற்கெனவே அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

    விசித்திரம்

    விசித்திரம்

    இந்நிலையில் இதுகுறித்து ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விசித்திரமாக உள்ளது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது.

    கலாசாரத்தை மீறியது

    கலாசாரத்தை மீறியது

    முல்லை பெரியாறு போன்ற பல முக்கிய வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சபரிமலை வழக்கில் மட்டும் அவசரம் ஏன்? கஜா புயல், கேரள வெள்ள பாதிப்பு என அனைத்துக்கும் கலாசாரத்தை மீறியது தெய்வ குற்றமே காரணம்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    சபரிமலைக்கு பெண்கள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் . ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும். சபரிமலை பிரச்சினையில் மத்திய அரசும், கேரள அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    இந்து கலாசாரத்தின் அடிப்படையில் தந்திரி சொல்வது போல அனைத்து பெண்களும் நடந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சினைகள் வராது.

    கலாசாரத்தை இழக்க

    கலாசாரத்தை இழக்க

    சபரிமலைக்கு பெண்கள் நான் செல்வேன் என கூறுவது பெருமையல்ல. கலாசாரத்தை காப்பாற்ற இந்துக்கள் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும். இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் கலாசாரத்தை இழக்க நேரிடும் என்றார் ஜீயர்.

    English summary
    Srivilliputhur Jeeyar says that Kerala flood and Gaja cyclone made disaster because of women trying to enter into Sabarimala temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X