விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களே உஷார்.. தீபாவளிக் கொள்ளையர்கள் கிளம்பிட்டாங்க.. வீடுகள் பத்திரம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை-வீடியோ

    ஸ்ரீவில்லிபுத்தூர்: தீபாவளி நெருங்கி விட்டதால் இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், நம்பிநாயுடு தெருவை சேர்ந்தவர் முருகன் வயசு 58. இவர் நேற்று சென்னையிலிருந்து தீபாவளிக்காக ஊருக்கு வரும் தனது மகள் சத்தியப் பிரியாவை அழைக்க தனது மனைவி மகாலட்சுமியுடன் வீட்டின் கதவை பூட்டி விட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றார்.

    மகளையும் மனைவியும் தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு முருகன் இன்று அதிகாலை வீடு திரும்புகிறார் வீடு திரும்பி அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க கதவு மற்றும் உட்புற கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது உள்ளே வந்து பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர் திருவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்

    மகாலட்சுமி வீட்டில்

    மகாலட்சுமி வீட்டில்

    தகவல் கிடைத்தவுடன் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை போன வீட்டை ஆய்வு செய்தனர் தடவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகனின் மனைவி மகாலட்சுமி கூறும்போது வீட்டில் சுமார் 50 பவுன் நகை கொள்ளை போய் உள்ளதாகவும் 50 ஆயிரம் கொள்ளை போனதாக தெரிவித்தார்.

     அமமுக பிரமுகர் வீட்டில்

    அமமுக பிரமுகர் வீட்டில்

    போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர் விசாரணைக்கு பிறகு எவ்வளவு நகை போடுவது எவ்வளவு பணம் கொள்ளை போய் உள்ளது என முழுமையான தகவல்கள் வெளியாகும் . இதேபோல, கிருஷ்ணன் கோயில் உள்ள ஆண்டாள் நகர் ஐந்தாவது தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார் 48. இவர் இந்தப்பகுதி அமுமுக முக்கிய பிரமுகராக உள்ளார். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

    கதவை உடைத்து

    கதவை உடைத்து

    இவர் தனது மைத்துனர் வீட்டு விசேஷத்திற்காக தனது குடும்பத்துடன் பரமக்குடிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து திருவில்லிபுத்தூரில் செய்ததுபோல் முன்பக்க கதவு உட்புறக் கதவு உட்பட அனைத்து கதவுகளை உடைத்து விட்டு உள்ளே போய் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்தோஷ் குமார் கூறும்போது வீட்டில் 84 பவுன் நகையை வைத்து வந்ததாகவும் அந்த எண்பத்து நான்கு பவுன் நகையோடு ஐந்து லட்ச ரூபாயும் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

    கேமரா உடைப்பு

    கேமரா உடைப்பு

    தகவல் கொடுத்து உடன் கிருஷ்ணன்கோவில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் விருதுநகர் இருந்து மோப்ப நாய் வந்து சென்றது தடவியல் நிபுணர்கள் வந்துள்ளனர். கொள்ளை போன சந்தோஷ்குமார் வீட்டை பொறுத்தவரை வீட்டில் உள்ள கேமராவை கொள்ளையர் உடைத்துள்ளனர். மேலும் வீட்டில் இருந்த கேமராக்கள் செயல்படாத நிலையிலும் இருந்துள்ளது. வீட்டில் கேமராக்கள் இருந்தும் செயல்படாத நிலையில் இருந்ததால் போலீசார் துப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சூறையாடினர்

    சூறையாடினர்

    இதற்கிடையே கிருஷ்ணன் கோயில் சீனிவாசன் நகர் ஈபி அலுவலகம் பின்புறம் வசிக்கும் ராஜேஸ்வரி வயசு 48 என்பவர் பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவுடன் அவரது வீட்டிலும் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து கதவை உடைத்து வீட்டுக்குள் பீரோவை உடைத்துள்ளனர். ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் எந்த பொருளும் கொள்ளை அடிக்க முடியலை. கோபத்தில் வீட்டு உள்ள பொருள்களை அங்குமிங்கும் சூறையாடி விட்டுச் சென்றுள்ளனர்.

    உள்ளே புகுந்து

    உள்ளே புகுந்து

    இதன்பின்னர் கிருஷ்ணன்கோவில் பாலாஜி நகரில் வசிக்கும் எட்வின் நாகராஜ் என்பவர் வீட்டுக்கு சென்று இதே ஸ்டைலில் கதவை உடைத்து வீட்டுக்குள் பீரோவில் பொருட்களை தேடியுள்ளனர். அங்கு பொருள்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டிலுள்ள பொருள்களை அங்குமிங்கும் சிதறி பொருட்களை சூறையாடி விட்டுச் சென்றுள்ளனர்.

     பீதியில் மக்கள்

    பீதியில் மக்கள்

    ஒரே நாள் இரவில் திருவில்லிபுத்தூர் நகரிலும் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மூன்று இடங்களிலும் கொள்ளையடிக்க முயன்று அதில் இரண்டு வீடுகளில் சுமார் 134 பவுன் நகை கொள்ளை அடித்து விட்டு சுமார் ஐந்தே முக்கால் லட்சம் பணத்தை எடுத்து விட்டு சென்றது திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரோந்துப் பணி

    ரோந்துப் பணி

    திருவில்லிபுத்தூர் நகரைப் பொறுத்தவரை தீபாவளியை முன்னிட்டு போலீசார் நேற்று இரவு முழுவதும் வாக்கிடாக்கி உடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருந்தனர்.

    இந்நிலையில் திருவில்லிபுத்தூர் நகரில் புகுந்து கொள்ளை அடித்து சென்றது நகர் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    சாதகமான மழை

    சாதகமான மழை

    போலீசார் ஏற்கனவே ரோந்து பணியில் தீவிரமாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் நேற்று இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த சாரல் மழை கொள்ளையர்களுக்கு சாதாரணமாக போய்விட்டது. சாரல் மழை பெய்ததால் இரவு நேரங்களில் இருக்கும் நடமாட்டம் நேற்று துப்புரவாக இல்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கலாம் என கொள்ளை போன பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

     கேமரா அவசியம்

    கேமரா அவசியம்

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது பல லட்சம் செலவில் வீடுகளை அலங்கரிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை பாதுகாக்கும் வகையிலும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் வீட்டின் முன்புற பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்த வேண்டும். போலீசார் பாதுகாப்பு பணி மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தாலும் இதுபோன்று நடக்கும் குற்றங்களை தடுப்பதற்கு குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கும் சிசிடி கேமரா உபயோகமாக இருக்கும் என தெரிவித்தார்.

    English summary
    Thieves have looted many houses in and around Srivilliputhur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X