விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முரசொலியை இருக்கட்டும்.. தமிழகத்தில் 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்படுமா? திருமாவளவன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Thol Thirmavalavan asks whether Murasoli office only be built in Panchami Land?

    விருதுநகர்: முரசொலி தலைமையகம் அமைந்து உள்ள இடம் மட்டும்தான் பஞ்சமி நிலம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கருதுகிறதா? அதே போல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12.5 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீட்டுத் தருமா என விளக்கம் அளிக்க வேண்டும் என விருதுநகரில் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் விருதுநகரில் சென்னை ஐஐடி மாணவி பாத்திமா பேராசிரியர்கள் அளித்த மன உழைச்சலால் உயிரிழந்து உள்ளார். இது போன்ற நிகழ்வு சென்னை ஐஐடி மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் துன்புறுத்தலும் மன உளைச்சல்கள் இழைக்கப்படுகிறது.

    அகில இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகளுக்கு எதிராக இழைக்கப்படுகிற துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை கமிஷன் மத்திய அரசு அமைக்க வேண்டும். தற்கொலை செய்துகொண்ட பாத்திமா குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு!இன்று சபரிமலை கோவிலுக்கு செல்வேன்.. திருப்தி தேசாய் பரபர அறிவிப்பு.. நிலக்கல்லில் போலீஸ் குவிப்பு!

    தீர்ப்பு

    தீர்ப்பு

    மாணவி தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தடை இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை தவிர்க்க வேண்டும். இதனால் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இது போன்ற உயிரிழப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய மாநில அரசு நிறுத்தி உள்ளது.

    அதிமுக- பாமக கூட்டணி

    அதிமுக- பாமக கூட்டணி

    நிறுத்தப்பட்ட கல்வி உதவி தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பான ஆவணங்களை மு.க ஸ்டாலின் முன்பே வெளியிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக அதிமுக பாமக கூட்டணியை சேர்ந்தவர்கள் காய் நகர்த்துகிறார்கள்.

    பஞ்சமி நிலம்

    பஞ்சமி நிலம்

    முரசொலி தலைமையகம் அமைந்து உள்ள இடம் மட்டும் தான் பஞ்சமி நிலம் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கருதுகிறதா? அல்லது தமிழ்நாடு முழுவதும் உள்ள 12.5 லட்சம் ஏக்கர் நிலங்களை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மீட்டு தருமா?

    பால் பாக்கெட்

    பால் பாக்கெட்

    உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு ஏன் இவ்வளவு காலம் தள்ளிப் போட்டது என தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவர்கள் அச்சப்படுகிறார்கள் என கூறுவதில் அர்த்தம் இருக்கும். ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடுவது வரவேற்கத்தக்கவை.

    பொதுமக்கள்

    பொதுமக்கள்

    ஆனால் பால் பாக்கெட் பயன்படுத்திய பிறகு பாக்கெட் தூக்கி ஏறிப்படும் அதனால் பால் பாக்கெட்டுகளில் அச்சிடுவதை விட பொது மக்கள் தினசரி பயன்படுத்தும் இடங்களில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை பதிவு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் திருமாவளவன்.

    English summary
    Thol Thirmavalavan asks whether Murasoli office only be built in Panchami Land? Could the National commission for SC,ST retrieve 12.5 lakh acres of Panchami land in Tamilnadu?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X