விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயசான ரஜினியால பிரச்சாரத்துக்கு போக முடியாது... வம்பிழுக்கும் ராஜேந்திர பாலாஜி!

Google Oneindia Tamil News

விருதுநகர் : ரஜினிக்கு வயதாகிவிட்டதால் அவரால் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாது என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி பதிலளித்தார்.

அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்பது கருத்துக்கணிப்பு முடிவல்ல, இது கருத்துத் திணிப்பு என்றார். யார் முதலமைச்சர் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: டெல்லி ஹைகோர்ட் அதிரடி ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: டெல்லி ஹைகோர்ட் அதிரடி

கமல் கட்சி காணாமல் போகும்

கமல் கட்சி காணாமல் போகும்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலம் என்ன என்பதை மக்கள் உணர்த்துவார்கள். ஒரு தேர்தலுக்குப் பிறகு கமல் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும் என்றார்.

ரஜினிக்கு வயதாகிவிட்டது

ரஜினிக்கு வயதாகிவிட்டது

ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர், அவருடைய வெகுளியான குணத்திற்கு அவர் அரசியலில் இறங்குவது சந்தேகம் தான். அது மட்டுமில்லாமல் ரஜினிக்கு 70 வயதாகிவிட்டது. இதற்கு மேல் அவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்ய முடியுமா.

பிரச்சாரம் செய்ய முடியாது

பிரச்சாரம் செய்ய முடியாது

32 மாவட்டங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்வது, மக்களை நேரில் சந்திப்பது தேர்தலில் வெற்றி பெறுவது என்பதெல்லாம் முடியாத காரியம். ஒரு வேளை 1996ம் ஆண்டே ரஜினி கட்சித் தொடங்கி இருந்தால் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

தேர்தலை சந்திக்க தயார்

தேர்தலை சந்திக்க தயார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் விதமாக கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் எந்த காலதாமதமும் இல்லை. காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும். நாளைக்கே தேர்தல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

English summary
TN minister Rajendra balaji criticises Rajinikanth's political entry, he mentioned that Rajini is 70 years old so he is not able to do campaign all over tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X