விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

படு கொடூரமாக கொல்லப்பட்ட பிரகதி.. விசிக நிர்வாகி மனைவி.. இத்தனை வன்மம் ஏன்.. சோகத்தில் சிவகாசி!

சிவகாசி விசிக நிர்வாகியின் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

விருதுநகர்: விசிக நிர்வாகியின் மனைவி பிரகதியை இவ்வளவு பயங்கரமாக கொன்றது யார் என்று தெரியவில்லை.. எதற்காக கொன்றார்கள் என்றும் தெரியவில்லை.. இது சம்பந்தமான விசாரணையில் சிவகாசி போலீசார் இறங்கி உள்ளனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் செல்வ மணிகண்டன். இவர் திருத்தங்கல் நகர விசிக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.. திருத்தங்கலில் உள்ள ஒரு பட்டாசு கம்பெனியில் மேனேஜராகவும் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஜுன் 24-ம் தேதிதான் இவருக்கு கல்யாணம் ஆனது.. மனைவி பெயர் பிரகதி மோனிகா.. ஆலமரத்துபட்டியை சேர்ந்தவர்.. பிஏ படிச்சிருக்கார்.. 24 வயதாகிறது.

கனிமொழி போட்ட கனிமொழி போட்ட "ஹிந்தி வெடிகுண்டு".. விடுமா பாஜக.. "இந்தி இல்லாமல் இந்தியா இல்லை" பதில் முழக்கம்

பிரகதி

பிரகதி

கல்யாணம் ஆகி இந்த ஒன்றரை மாதமும் தம்பதி சந்தோஷமாக இருந்துள்ளனர்.. கடந்த சனிக்கிழமை மணிகண்டன் வழக்கம்போல சென்றுவிட்டார்.. மதியம் 1.30 மணிக்குகூட பிரகதியிடம் போன் செய்து பேசியுள்ளார்.. அதற்கு பிறகு மறுபடியும் பிரகதிக்கு போன் செய்தபோது, அவர் எடுக்கவே இல்லை. அடுத்தடுத்து போன் செய்தும் போன் எடுக்காததால், அருகில் வசிக்கும் சொந்தக்காரர்களுக்கு போன் செய்து, வீட்டில் என்ன ஏதென்று போய்பார்க்க சொன்னார்.

 ரத்த வெள்ளம்

ரத்த வெள்ளம்

அவர்களும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான், பிரகதி பிணமாக கிடந்தார்.. வீடெல்லாம் ரத்தமாக கிடந்தது. இதை பார்த்து அலறிய உறவினர்கள், மணிகண்டனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், அவர் விரைந்து வந்தார்... சடலத்தை கண்டு கதறி கதறி அழுதார்.. அதற்குள் சிவகாசி கிழக்கு போலீசாரும் வீட்டுக்கு வந்து பிரகதி சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நகைகள்

நகைகள்

விசாரணையும் ஆரம்பமாகி உள்ளது.. பிரகதி கழுத்தில் கிடந்த ஒரு சவரன் நகையை காணோம் என்று முதலில் சொல்லப்பட்டது.. ஆனால் ஒரு சவரனுக்காக இப்படி பயங்கரமான கொலை நடந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், வீட்டில் பீரோவுக்குள் மற்ற நகைகளும் அப்படியே இருந்திருக்கிறது. அதனால் நகைக்காக இந்த கொலை நடக்கவில்லை என்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாக தெரிந்துள்ளது..

விரோதிகள்

விரோதிகள்

பிறகு, விசிக நிர்வாகியா மணிகண்டன் இருப்பதால், அரசியல் ரீதியாக ஏதேனும் விரோதிகள் உள்ளனரா.. அவர்களால் பிரகதி பழிதீர்க்கப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.. ஆனால், மணிகண்டனுக்கும் அப்படி எதிரிகள் யாருமே கட்சி சார்பாக இல்லையாம்.. அதனால் அந்தவகையிலும் இந்த கொலை நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 7 பேரிடம் விசாரணை

7 பேரிடம் விசாரணை

இதையடுத்து, பிரகதியின் உறவினர்கள், சொந்தக்காரர்கள், நண்பர்கள் வட்டத்தில் யாராவது எதிரிகள் உள்ளனரா என்ற கோணத்தில் அடுத்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.. சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்தும் வருகிறார்கள். எனினும் இப்போது வரை விசிக பிரமுகர் மனைவியை யார் கொன்றார்கள், ஏன் கொன்றார்கள் என்பது மட்டும் தெரியவே இல்லை.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

இளம்பெண் பிரகதியின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. பிரகதியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் விசிக சார்பாகவே கோரிக்கையும் வலுவாக விடப்பட்டுள்ளது!

English summary
vck party members 24 year old wife killed near sivakasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X