விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்கள் ஐயப்ப பக்தர்கள்.. ஓட்டு கேட்டு வர வேண்டாம்... திமுக கூட்டணிக்கு எதிராக போஸ்டர்

Google Oneindia Tamil News

விருதுநகர்: எங்கள் வீட்டில் ஐயப்பனை கும்பிடுபவர்கள் என்றும் கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் எனவும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலை கோவிலுக்குள் இளம் பெண்களை அனுப்புவதில் ஆர்வம் காட்டியது.

We Are Ayyappa devotees : Do not ask to vote, Poster against the DMK alliance In Virudhunagar

இதனால், கேரளாவில் பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. ஐயப்ப பக்தர்களின் மீது தடியடி சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், அந்தக் கூட்டணிக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

விருதுநகரில் உள்ள அய்யனார் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வசிக்கும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில், எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்பனை கும்பிடுபவர்கள். எனவே கம்யூனிஸ்ட், திமுக கூட்டணி கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்... பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது பெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்... பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது

இதேபோன்று, இனி அனைத்து பகுதிகளிலும் நோட்டீஸ் அடித்து ஒட்டுவோம் என ஐயப்ப பக்தர்கள் தெரிவித்துள்ளனர். தான் இந்துகளுக்கு எதிரானவன் என பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி , வாகனத்தின் மீது செருப்பு வீசிய இளைஞர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை நோக்கி சோடா பாட்டில் வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

English summary
Do not come to vote: Poster against DMK Alliance in Virudhunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X