விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்கள் மனதில் விஷத்தை கலந்து வெற்றியை அறுவடை செய்த திமுக.. ராஜேந்திர பாலாஜி தாக்கு

Google Oneindia Tamil News

விருதுநகர்: மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஏற்பட்ட சுணக்கமே காரணம் என அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை தக்க வகை்க வேண்டுமே என்ற பீதியிலேயே செயல்பட்ட அதிமுக மகக்ளவை தேர்தலில் கோட்டை விட்டு பலத்த அடி வாங்கியுள்ளது 9 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் ஜெயித்து ஆட்சியை தக்க வைத்து கொண்டாலும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மக்களவை தேர்தலில் வாங்கிய அடியை ஜீரணிக்க முடியாமல் உள்ளது அதிமுக

We have learned a lot of lessons from electoral defeat.. Minister Rajendra Balaji

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்போது பேசிய அவர் மக்களவை தேர்தல் முடிவுகள் அதிமுக-விற்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளதாக கூறினார். தவறுகளையெல்லாம் களைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மீண்டும் தொடரும் வகையில் கட்சி மேலும் பலப்படுத்தப்படும் என்றார்.

 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா! 25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா!

கட்சியை வலுப்படுத்த எடுக்கப்படும் எந்த முடிவானாலும் அதனை ஏற்று கொண்டு செயல்பட்டு, வரும் காலங்களில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மூலம் கற்று கொண்டுள்ளதாக கூறினார்.

அதே போல டிடிவி தினகரனின் அமமுகவிற்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பித்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களால் எந்த பலனும் இருக்க போவதில்லை என கூறினார்

ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!ஹாசன் எம்.பி. பதவி- திடீர் ராஜினாமா செய்த தேவகவுடா பேரன்! பரபர பின்னணி!

மேலும் அதிமுக மீதான புகார்கள் குறித்து மக்கள் யோசித்த வேளையில், அவர்கள் மனதில் திமுக நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்

English summary
Rajendra Balaji, the AIADMK, said the failure of the Lok Sabha elections was a result of their election campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X