• search
விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!

|

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

We will build Ram temple at Ayodhya at any cost, says Srivilliputhur Jeeyar

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்று இந்து மக்கள் அனைவரும் ஒரே மனபான்மையில் இருக்கிறார்கள். அயோத்தியில் இராமஜென்ம பூமியில் அவரது இடத்தில் கோவில் கட்டுவதில் மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோயில் கட்ட வேண்டும். இராமருக்கு கோவில் கட்டுவதற்கு பிரச்சனைகள் தேவையில்லை.

பங்குனி உத்திரம் 2019 - முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க

பாபரின் வாரிசு அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் வேறு எந்த கோவிலும் கட்ட கூடாது என சொல்லியிருக்கிறார். இதற்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தர வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்கியது போல , 80 வருடங்களாக நடைபெறும் ராமர் கோயில் பிரச்சனைக்கு நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

ராமர் கோவில் கட்டுவதற்கு நீதிமன்றமும், மத்திய அரசும் நல்ல தீர்ப்பு சொல்லும் என நம்புகிறோம். ஓரிரு மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீ ராமபாத யாத்திரா என்னும் யாத்திரையை ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி அயோத்திவரை ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை பயணம் மேற்கொள்ள போகிறோம்.இந்து மக்கள் ஒன்று சேர்ந்து இராமர் கோவில் இராமர் இடத்தில் கட்டியே தீர்வோம். அந்த இடத்தில் வேறு எந்த கோவிலும் வரக் கூடாது.

அயோத்தி விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மத்தியஸ்தம் தேவையில்லை. மக்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு வேறு யாரும் வேண்டியதில்லை.

இந்து மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து இருப்பார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமர் ஆட்சி அமையும் என்றார் ஜீயர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

விருதுநகர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
மாணிக்கம் தாகூா் காங்கிரஸ் வென்றவர் 4,70,883 44% 1,54,554
ஆர். அழகர்சாமி தேமுதிக தோற்றவர் 3,16,329 29% 1,54,554
2014
ராதாகிருஷ்ணன் டி அஇஅதிமுக வென்றவர் 4,06,694 41% 1,45,551
வைகோ மதிமுக தோற்றவர் 2,61,143 26% 0
2009
மாணிக்க தாகூர் காங்கிரஸ் வென்றவர் 3,07,187 40% 15,764
வைகோ மதிமுக தோற்றவர் 2,91,423 38% 0

 
 
 
English summary
Srivilliputhur Jeeyar has said that Hindus will build Ram temple at Ayodhya at any cost and also said that they dont need mediation.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more