விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சதுரகிரி கோயிலில் ஒரு இட்லி விலை ரூ.20, தோசை விலை ரூ.100க்கு விற்பனை.. பக்தர்கள் அவதி

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி கோயிலில் அன்னதான கூடங்கள் மூடப்பட்ட நிலையில், அங்கு உள்ள கடைகளில் இட்லி, தோசை உள்ளிட்ட, உணவு பொருட்களின் விலை தாருமாறாக உயர்த்தி விற்கப்பட்டதால் மக்கள் வாங்கி சாப்பிட முடியாமல் பசியுடன் திரும்பினார்கள்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இங்கு ஒவ்வொரு அமாவாசையின் போதும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று தரிசனம் செய்வார்கள்.

without water and food in sathuragiri temple, devotees worry

அந்த வகையில் தற்போது அமாவாசையை முன்னிட்டு மே 2ம் தேதி பக்தர்களுக்காக கேட் திறக்கப்பட்டது. சுமார் 4 நாட்களாக இன்று வரை பக்தர்கள் சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்து வருகிறார்கள்.

நேற்று சித்திரை அமாவாசை மற்றும் கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். ஆனால் தாணிப்பறை முதல் கோயில் வரை குடிநீர் எங்குமே கிடைக்கவில்லை. குடிநீர் பாட்டில்கள் தான் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

மார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை.. தங்கம், வைர குவியல்.. கட்டுக் கட்டாக பணம் மார்ட்டின் வீட்டில் சோதனை.. கட்டிலுக்கு கீழே ரகசிய அறை.. தங்கம், வைர குவியல்.. கட்டுக் கட்டாக பணம்

இதனிடையே கோயிலில் அன்னதான கூடங்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் பசியால் தவித்தனர். அங்கிருந்த கடைகளில் ஒரு இட்லி விலை ரூ.20க்கும், தோசை விலை ரூ.100க்கும் விற்கப்பட்டதால் உணவினை வாங்கி உண்ண முடியாமல் பசியுடன் கோயிலில் இருந்து பல பக்தர்கள் வீடு திரும்பினர்.

மேலும் சதுரகிரி கோயிலில், தண்ணீர், உணவு உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

English summary
without water and food in sathuragiri temple, foods prices more than rs 100. devotees worry
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X