விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'நீ எல்லாம் உயிரோட வாழணுமா' திட்டிய மாமியார்.. விபரீத முடிவெடுத்த அஸ்வினி.. அலறிய குழந்தைகள்

Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாமனார் மாமியார் கொடுமையால் 2 குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு அஸ்வினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமாக கணவர் மாமனார் மாமியார் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் அஸ்வினி வயது 26 இவருக்கும் சிவகிரி சேர்ந்த சிவசங்கரன் மகன் அருணாசலத்திற்கு கடந்த 6 ஆண்டுகள் முன்பு கல்யாணம் நடந்தது.

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர் இந்நிலையில் மாமனார் மாமியார் அஸ்வினியை கொடுமைப்படுத்தியதாக கூறி அஸ்வினி தனது தந்தை வீட்டில் திருவள்ளூர் நகரில் வாழ்ந்து வந்தார்

உயிரோடு வாழணுமா

உயிரோடு வாழணுமா

இதனால் இருவரையும் சேர்த்து வைக்கும் நோக்கத்தில் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவிலலை. இதனால் ஆத்திரம் அடைந்த அஸ்வினியின மாமனார் மாமியார் தொலைபேசி மூலம் தகாத வார்த்தைகள் திட்டியும் நீ எல்லாம் உயிரோட வாழவேண்டுமா எனக்கூறி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இதற்கிடையில் மனவேதனையில் இருந்த அஸ்வினி தனது டைரியில் தனது தற்கொலைக்கு மாமனார் மாமியார் மற்றும் நாத்தனார் காரணம் என டைரியில் எழுதி வைத்து அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் தன் கணவருக்கும் மாமனார் மாமியாருக்கு அனுப்பி உள்ளார் . பின்னர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அலறிய குழந்தைகள்

அலறிய குழந்தைகள்

இரவில் குழந்தைகள் எழுந்து பார்த்தபொழுது தூக்கில் தாய் தொங்குவதை அலறி அழுது உள்ளனர் இதை பார்த்த அஸ்வினின் பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

பின்பு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்டைரியில் எழுதி இருந்ததை பார்த்த அஸ்வினியின் தகப்பனார் செல்வராஜ் அதிர்ச்சி அடைந்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் தனது மகள் தற்கொலை காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுத்தார் .

 அஜாக்கிரதை

அஜாக்கிரதை

இதற்கிடையில் மாமனாரும் மாமியாரும் அஸ்வின் உடல் வைக்கப்பட்ட அரசு மருத்துவனைக்கு நேரில் வந்துள்ளனர் அவர்களை போலீசார் கைது செய்ய கோரி உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இராஜபாளையம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இரவிலே வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்த பின்பும் அது குறித்து அஜாக்கிரதை இருந்துவிட்டு தங்களுக்கு கூட தகவல் தெரிவிக்காதது மனவேதனை அளிப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் உறுதி

போலீஸ் உறுதி

தற்கொலைக்கு காரணமான மாமியார் மாமியாரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவதாக கூறி காவல்துறையினரும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்பு தகவலறிந்து வந்த இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் உடனடியாக அவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின்பு சாலை மறியலை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர். வாழ வேண்டிய வயதில் தங்கள் மகளை இழந்த பெற்றோர்கள் உறவினர்களை கதறி அழுதது அப்பகுதியில் மிகுத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

English summary
women dies in rajapalayam after The mother-in-law scolded, women send massage before suicide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X