விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. "அதை" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை!

Google Oneindia Tamil News

விருதுநகர்: எங்க போயி சொல்றது இந்த கொடுமையை? அபார்ஷன் செய்ய ஆஸ்பத்திரிக்கு போன பெண்ணுக்கு, தெரியாமல் "கு.க." பண்ணிவிட்டார்களாம்! திரும்பவும் அபார்ஷன் செய்கிறோம் என்று ஆஸ்பத்திரி சொன்னதற்கு, அந்த பெண் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடியேவிட்டாராம்!

திருமங்கலம் அருகிலுள்ள மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஆசை - புனிதா. இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதில் 5-வதாக கருவுற்றார் புனிதா. ஏற்கனவே 4 இருப்பதால், இந்த குழந்தையை கலைத்துவிடலாம் என்று தனியார் ஆஸ்பத்திரிக்கு போனார். ஆனால் அந்த ஆஸ்பத்திரி, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அபார்ஷன் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் புனிதா அங்கு போகாமல், கடந்த 12-ம் தேதி விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

அபார்ஷன் செய்த கையோடு, குடும்ப கட்டுப்பாடும் செய்து கொள்ளுமாறு ஆஸ்பத்திரியில் சொல்லி உள்ளனர். ஆனால், கு.க.வை பண்ணிவிட்டு, மறந்து போய் அபார்ஷன் செய்யாமல் விட்டுவிட்டனர். இப்படியே 8 நாள் ஆஸ்பத்திரியில் வைத்திருந்து அனுப்பி விட்டார்கள்.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்நிலையில், புனிதாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார் ஸ்கேன் சென்டரில் டெஸ்ட் எடுத்து பார்த்தால் வயிற்றில் குழந்தை இருந்தது. இதை பார்த்து ஷாக் ஆன புனிதா, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

"இந்த முறை சரியாக அபார்ஷன் செய்துவிடுகிறோம்" என்றும் சொல்லி அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் இந்த முறை என்ன செய்துவிடுவார்களோ என்று பயந்துபோன புனிதா, ராத்திரியோடு ராத்திரியாக தப்பி ஓடிவிட்டாராம்.

வரவே இல்லையாம்

வரவே இல்லையாம்

ஆஸ்பத்திரிக்கு வரும்படி பலமுறை கூப்பிட்டும் புனிதா வரவே இல்லையாம்.. ஆம்புலன்ஸை வீட்டுக்கு அனுப்பி வைத்தும் வர மாட்டேன் என்று சொல்லி, "நான் தனியார் ஆஸ்பத்திரியிலேயே அபார்ஷன் பண்ணிக்கறேன்" என்று கறாராக சொல்லி விட்டாராம்.

English summary
The Virudhunagar Gov hospital has made family control of the woman who needs an abortion
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X