வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா: அதிரவைக்கும் அமெரிக்கா.. உலக நாடுகளை மிஞ்சியது.. ஒரே நாளில் 1,480 பேர் பலி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,480 பேராக உயர்ந்துள்ளது. மற்ற எந்த நாடுகளிலும் இது போல் ஒரே நாளில் இத்தனை பலி எண்ணிக்கை இருக்கவில்லை.

Recommended Video

    கொரோனா வைரஸால் ஒன்றிணைந்த அமெரிக்கா - ரஷ்யா

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,995 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    வல்லரசு நாடான இங்கு இதுவரை 7,406 பேர் பலியாகிவிட்டனர். இதை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

    நியூயார்க்கில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. செப்டம்பர் 11 தாக்குதலை கண்முன் நிறுத்தும் சோகம்! நியூயார்க்கில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. செப்டம்பர் 11 தாக்குதலை கண்முன் நிறுத்தும் சோகம்!

    சீனாவில் வைரஸ்

    சீனாவில் வைரஸ்

    வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவை காட்டிலும் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கொரோனா பலி எண்ணிக்கையில் சீன அரசு உண்மையைதான் சொல்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும் என கேட்டார்.

    அரசு திணறல்

    அரசு திணறல்

    இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமெரிக்காவில் 1,480 பேர் பலியாகிவிட்டனர். அதாவது கிட்டதட்ட1500 பேர் வரை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த உலக நாடுகளிலும் இது போன்று அதிக அளவிலான பலி எண்ணிக்கை இல்லை. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது.

    டிரம்ப் கவலை

    டிரம்ப் கவலை

    அமெரிக்காவில் பலி எண்ணிக்கை இனி வரும் வாரங்களில் மிகவும் அதிகமாக இருக்கும் என டிரம்ப் கவலை தெரிவித்திருந்தார். அது போல் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டு மருத்துவர் அதிர வைக்கும் தகவலை தெரிவித்திருந்தார். அது போல் மருத்துவ உபகரணங்களுக்கும் இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எப்போதும் மற்ற நாடுகளுக்கு உதவு பழக்கத்தை கொண்ட அமெரிக்கா, தற்போது ரஷ்யாவின் உதவியை நாடியது.

    மாஸ்க்

    மாஸ்க்

    பொது இடங்களுக்கு வருவோர் துணியிலால் ஆன மாஸ்க்குகளை கட்டாயம் அணிய வேண்டும் என மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. என்னதான் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இன்னும் வைரஸ் அவர்களது உடலிலேயே இருக்கும் என்பதால் இந்த பரிந்துரையை செய்துள்ளது. அமெரிக்காவில் இறந்தோரின் 25 சதவீதம் மக்கள் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.

    English summary
    As per corona tracker, US has shocked death reports in a single day with 1,480 deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X