வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 மணி நேரத்தில் புதிதாக பாதித்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.6 கோடியாக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 6.51 லட்சமானது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளும் மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தால் மட்டுமே அவை சந்தைக்கு வரும்.

1.6 crore were infected with coronavirus

இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,67,04,010 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 6.51 லட்சமாகும். கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1 கோடியாக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,247 ஆகும். அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 43 லட்சமாக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,49,843 ஆகும். இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 55,567 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரேசிலில் 24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 87,052 பேர் பலியாகிவிட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 23,467 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் 14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ரேஷன் கடைகளில் இனி அரிசியுடன் சேர்த்து மாஸ்க்கும் ஃப்ரீ!.. ஆளுக்கு ரெண்டு.. இன்று முதல் தொடக்கம் ரேஷன் கடைகளில் இனி அரிசியுடன் சேர்த்து மாஸ்க்கும் ஃப்ரீ!.. ஆளுக்கு ரெண்டு.. இன்று முதல் தொடக்கம்

இதுவரை 32,812 பேர் பலியாகிவிட்டனர். ரஷ்யாவில் 8.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 13,269 ஆகும். தென்னாப்பிரிக்காவில் 4.45 லட்சம் பேரும், மெக்சிகோவில் 3.85 லட்சம் பேரும், பெருவில் 3.79 லட்சம் பேரும் ஸ்பெயினில் 3.19 லட்சம் பேரும், பிரிட்டனில் 2.99 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

English summary
1.6 crores were infected Globally and death toll mounts to 6.5 lakhs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X