வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்காவை பின்தொடரும் இந்தியா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா இதுவரை 19,523,651 பேர் பாதித்தோர் ஆவர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 7.22 லட்சமாகும்.

1.9 crores people were affected by corona

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.2 கோடியாகும். அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 1.64 லட்சமாக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 26 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். பிரேசிலில் 29 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 49,502 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 99.702 பேர் பலியாகிவிட்டனர்.

இந்தியாவில் 20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் புதிதாக 61,455 நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இதுவரை இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 42,578 ஆக உயர்ந்துள்ளது.

நான்தான் அப்பவே சொன்னேனே.. இப்போ பாருங்க.. அதே மாதிரி ஆகிப்போச்சு.. ராகுல் காந்தி ட்வீட் நான்தான் அப்பவே சொன்னேனே.. இப்போ பாருங்க.. அதே மாதிரி ஆகிப்போச்சு.. ராகுல் காந்தி ட்வீட்

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.77 லட்சமாக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 14,725 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 9,909 பேர் பலியாகிவிட்டனர்.

Recommended Video

    Coronavirus vaccine கண்டுபிடித்தால் முதலில் யாருக்கு கிடைக்கும்?

    மெக்சிக்கோவில் 4,62,690 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருவில் 4.55 லட்சம் பேருக்கும் சிலியில் 3.68 லட்சம் பேருக்கும், கொலம்பியாவில் 3.67 லட்சம் பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் 3.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    English summary
    So far 1.9 crores people were affected for Corona in worldwide. Total Death toll reaches to 7.22 lakhs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X