வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை துரத்தும் பிரேசில்.. விழிபிதுங்கும் போல்சனோரோ அரசு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.02 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சமானது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,38,199 ஆகும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,04,078 ஆகும்.

1 crore and more were infected with Coronavirus globally.

கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 55 லட்சமானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 41 லட்சம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 57,670 பேர் அபாய கட்டத்தில் உள்ளார்கள்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சமாக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.28 லட்சமானது. அது போல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சமானது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 57 ஆயிரமாகும்.

சின்ன சின்ன தவறுகள்.. தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்? வல்லுநர்கள் தந்த விளக்கம் சின்ன சின்ன தவறுகள்.. தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க என்ன காரணம்? வல்லுநர்கள் தந்த விளக்கம்

ரஷ்யாவில் 6.34 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலி எண்ணிக்கை 9,073 ஆகும். இந்தியாவில் 5.49 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலி எண்ணிக்கை 16,487 ஆகும்,

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,11,151 ஆகும். இங்கு 43 ஆயிரம் பேர் பலியாகிவிட்டனர். ஸ்பெயினில் 2.95 லட்சம் பேரும், பெருவில் 2.79 லட்சம் பேரும், சிலியில் 2.71 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    India-வுக்கு Russia-வழங்கும் 33 நவீன போர் விமானங்கள்..ஆயுதங்கள்!

    English summary
    1 crore and more were infected with Coronavirus globally. 5 lakhs were died.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X