வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 நாடுகள்.. மொத்தமாக கொரோனாவிலிருந்து விடுதலை.. முழு விவரம்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இதுவரை, மொத்தம் 10 நாடுகள் கொரோனா வைரசிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளன. அந்த நாடுகளே இவற்றை அறிவித்துள்ளன.

நியூசிலாந்து இதில் லேட்டஸ்டாக இணைந்த நாடு ஆகும். இந்த 10 நாடுகளுமே பெரும்பாலும், குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட நாடுகள்.

கொரோனா ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாடுகளின் முழுமையான பட்டியலையும், மொத்தமாக அறிவிக்கப்பட்ட கேஸ் விவரங்களையும் பார்ப்போம்:

புதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு!! புதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு!!

நியூசிலாந்து

நியூசிலாந்து

நியூசிலாந்து- அறிவித்த நாள் 2020 ஜூன் 8- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500 க்கும் மேல். தான்சானியா நாட்டில், ஜூன் 7ம் தேதி கொரோனா இல்லை என அறிவிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனாவுக்கு குட் பை

கொரோனாவுக்கு குட் பை

பிஜி தீவுகளில் ஜூன் முதல் வாரம் கொரோனா ஒழித்துக் கட்டப்பட்டது. முன்பு அங்கே, 18 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மோன்டெனெக்ரோ நாட்டில், மே 24ம் தேதியோடு கொரோனாவுக்கு வணக்கம் வைக்கப்பட்டது. 324 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். செயின்ட் கிட்ஸ் நேவிஸ் நாட்டில் மே 19ம் தேதியுடன், கொரோனாவுக்கு குட்பை சொல்லப்பட்டது. 15 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

நியூசிலாந்து லேட்டஸ்ட்

நியூசிலாந்து லேட்டஸ்ட்

சீஷெல்ஸ் நாட்டில் கொரோனா ஒழிக்கப்பட்டதாக மே 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. 11 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நியூசிலாந்து, ஜூன் 8ம் தேதி இப்படியான அறிவிப்பு செய்தது. 1500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் அங்கு வெளிநாட்டிலிருந்து வந்த சிலருக்கு பிறகு கொரோனா கண்டறியப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

வட கொரியா

வட கொரியா

வாட்டிகன் சிட்டியில், ஜூன் 6ம் தேதி முதல் கொரோனா ஒழிந்தது. முன்பு அங்கு 12 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த லிஸ்டில் வட கொரியா சமீபத்தில் சேர்ந்துள்ளது. அது இரும்புத் திரை நாடு என்பதால், பாதிப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் கொரோனா காலி என்று அதிபர் கிம் தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகள்

மேலும் இரு நாடுகள்

திமோர்-லெஸ்டே நாட்டில், மே 15ம் தேதியுடன், கொரோனா விடைபெற்றது. 24 பேர் அங்கு முன்பு பாதிக்கப்பட்டிருந்தனர். பப்புவா நியூ கினி நாட்டில், மே 4ம் தேதியுடன், கொரோனா காலியாம். முன்பு அங்கு, 24 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா இல்லாத மாநிலங்கள்

கொரோனா இல்லாத மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா இல்லாத மாவட்டங்கள், அல்லது மாநிலங்களும் உள்ளன. அருணாச்சல பிரதேசம், கோவா, மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், நாகாலாந்து ஆகியவை தங்கள் மாநிலத்தில் கொரோனா ஒழிக்கப்பட்டதாக கடந்த மாதம் அறிவித்தன. ஆனால் இதில் பல மாநிலங்களில் பிறகு கொரோனா பரவியதாக பிறகு தெரிவித்தன. ஆனால் அங்கெல்லாம், கட்டுப்பாட்டில்தான் உள்ளது நிலவரம்.

English summary
10 corona free country in the world, list is here you can watch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X