வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாதிப்பு!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 11.43 கோடியாக உயர்ந்துள்ளது. அது போல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.36 லட்சமாக உயர்ந்துள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா இன்று உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. தற்போது இங்கிலாந்திலிருந்து உருமாறிய கொரோனா வேறு பரவி வருகிறது.

11.43 crore were affected for corona globally

இந்த நிலையில் பழைய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.43 கோடி பேராகும். உலகளவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 25.36 லட்சமாகும்.

அது போல் கொரோனாவால் மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8.99 கோடி பேராகும். அமெரிக்காவில் 2.92 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் இதுவரை 5.24 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 1.96 கோடி பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் 11,096,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 157,087 பேர் பலியாகிவிட்டனர். 10,773,275 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். பிரேசிலில் 1.05 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் பலி எண்ணிக்கை 2.54 லட்சமாகும். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சமாகும்.

தமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ் தமிழகத்தில் 486 பேருக்கு இன்று கொரோனா உறுதி - 491 பேர் டிஸ்சார்ஜ்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,834 லட்சம் பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அது போல் இந்தியாவில் 17,346 பேரும் பிரேசிலில் 59,438 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனா பரவி வரும் பிரிட்டனில் 7,434 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக பாதித்தோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

ரஷ்யாவில் 42 லட்சம் பேரும், பிரிட்டனில் 41 லட்சம் பேரும், பிரான்ஸில் 37 லட்சம் பேரும், துருக்கியில் 26 லட்சம் பேரும், இத்தாலியில் 24 லட்சம் பேரும் ஸ்பெயினில் 31 லட்சம் பேரும், ஜெர்மனியில் 24 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

English summary
11.43 crore were affected for corona globally. So far 25.36 lakhs were died for this deadly virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X