வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜார்ஜ் பிளாய்டு இனவெறி கொலையை உலகிற்கு வீடியோ மூலம் அம்பலப்படுத்திய பெண்ணுக்கு புலிட்சர் விருது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் இனவெறி காரணமாக ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் கழுத்து நெரித்து காவல் துறையால் கொல்லப்பட்ட சம்பவத்தை வீடியோவாக எடுத்த 18 வயது பெண்ணுக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை அழைத்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது திடீரென ஒருவர் ஜார்ஜை படுக்க வைத்து அவரது முட்டியால் கழுத்தை நெரித்தார். தன்னால் மூச்சுவிட முடியவில்லை என ஜார்ஜ் கெஞ்சியும் அந்த போலீஸ்காரர் கேட்கவில்லை.

மணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து போன மணப்பெண்! மணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து போன மணப்பெண்!

கருப்பினத்தவர்

கருப்பினத்தவர்

இதனால் ஜார்ஜ் பலியானார். இது கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதலாகவே பார்க்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள கருப்பினத்தவர்கள், வெள்ளையர்கள் என போலீஸின் செயலுக்கு கண்டித்து வெள்ளை மாளிகை அருகே போராட்டத்தை நடத்தினர்.

ஃபுட்பால் மைதானங்கள்

ஃபுட்பால் மைதானங்கள்

இந்த சம்பவத்தை அடுத்து கிரிக்கெட் மைதானங்கள், ஃபுட்பால் மைதானங்களிலும் வீரர்கள் முட்டி போட்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து அந்த போலீஸ்காரருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் வெளியுலகிற்கு தெரிய முழு முதல் காரணமாக இருந்தவர் 18 வயது இளம்பெண்.

புலிட்சர் விருது

புலிட்சர் விருது

அவர் இந்த வீடியோவை வெளியிட்டதால்தான் ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு ஒரு நியாயம் கிடைத்தது. அவரது பெயர் டார்னெல்லா பிரேஸர். இவரை கவுரவப்படுத்தும் வகையில் இந்த ஆண்டுக்கான புலிட்தர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

புகைப்பட கலைஞர்கள்

புகைப்பட கலைஞர்கள்

ஊகட, புகைப்பட கலைஞர்களுக்கு இந்த உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இது பத்திரிகை, இணைய ஊடகம், இலக்கியம், இசையமைப்பு, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இது வழங்கப்படுகிறது.

English summary
18 years old girl won Pulitzer prize who recorded George Floyd killing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X