வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் மாகாணங்களில் இதுவரை 2.2 கோடி பேர் வாக்களித்து புதிய சரித்திரம் படைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் மாகாணங்களில் வாக்காளர் குழு அல்லது மாகாணங்களின் தேர்தல் சபைக்கான தேர்தல் நடைபெறும்.

மாகாண குழு ஆதரவு

மாகாண குழு ஆதரவு

இந்த குழுவினர்தான் அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்த வாக்காளர் குழு அல்லது மாகாணங்களின் தேர்தல் சபை மொத்த எண்ணிக்கை 538. இதில் 270 குழுக்களின் ஆதரவு இருந்தால்தான் அதிபர் ஆக முடியும்.

அதிபரை தீர்மானிப்பவர்கள்

அதிபரை தீர்மானிப்பவர்கள்

மாகாணங்களில் அதிபர் வேட்பாளருக்கு வாக்குகள் அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் தீர்மானிக்கும் சக்திகள் இவர்கள்தான். கடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப்க்கு மாகாணங்களில் வாக்குகள் குறைவாக இருந்த போதும் இந்த குழுக்களின் பெரும்பான்மை இருந்ததால் அதிபரானார்.

வாக்களிப்பு தீவிரம்

வாக்களிப்பு தீவிரம்

இப்போது 50 மாகாணங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரடி மற்றும் தபால் வாக்களிப்பு இரண்டும் இத்தேர்தலில் இடம்பெற்றுள்ளது. இதில் இதுவரை மொத்தம் 2.2 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த அதிபர் தேர்தலை ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். கொரோனா பரவல் இருக்கும் காலத்திலும் அதிக அளவில் வாக்களித்திருக்கின்றனர்.

அதிக வாக்களிப்பு?

அதிக வாக்களிப்பு?

தற்போதைய நிலையில் அமெரிக்காவில் சுமார் 15 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 1908-ம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் முதல் முறையாக மிக அதிக அளவில் வாக்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to US Election Department, 2.2 Crore Americans had voted in Presidential Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X