வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 34,80,496 ஆக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 2.44 லட்சமானது.

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் கடந்த 4 முதல் 5 மாதங்களாக போராடி வருகின்றன. எனினும் ஒரு தீர்வு கிடைத்தபாடில்லை. பொருளாதார பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது.

34 lakhs and above were affected globally by Corona

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.45 மணிக்கு கிடைத்த தகவலின் படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,80,496 ஆக உயர்ந்துள்ளது. இது போல் பலியானோரின் எண்ணிக்கை 2,44,610 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 11,08,065 ஆகும். தற்போது மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,27,821 ஆகும். அவர்களில் 50,864 பேரின் உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 20 லட்சம் பேரின் உடல்நிலை சீராக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 11,60,185 ஆகும். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 67,410 ஆக உள்ளது. இந்த நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது. 9.32 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அது போல் அடுத்த இடத்தில் ஸ்பெயின் உள்ளது. இங்கு 2,45,567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25,100 பேர் பலியாகிவிட்டனர். இங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1.46 லட்சமாகும். 74,234 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தாலியில் 2,09,328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 28,710 ஆகும். கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 79,914 ஆகும். 1,00,704 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பிரிட்டனில் நோய் பாதித்தோர் எண்ணிக்கை 1,82,260 ஆகியுள்ளது. இங்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 28,131 ஆகும். மருத்துவமனையில் 1,53 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரான்ஸில் 1,68,386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 24,760 பேர் பலியாகிவிட்டனர். 50 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர். 93,074 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Recommended Video

    வேலையை காட்டிய பேனிக் பையிங்... சென்னையை மிரட்டும் கொரோனா

    பிரேசிலில் 96,559 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 6,750 ஆகும். குணமடைந்தோர் எண்ணிக்கை 40,937 ஆகும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 48,872 ஆகும். சிங்கப்பூரில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 17,548 ஆக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆனது. 1,347 பேர் மீண்டுள்ளனர். 16,184 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    English summary
    Coronavirus pandemic: 34 lakhs and above were affected globally. There were 2.44 lakh deaths.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X