வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலையிட்ட டிரம்ப்.. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ்க்கு சாத்தியமான சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்தாக கருதப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்தியா நீக்கிய சில நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளுடன் ஒரு சரக்கு விமானம் அமெரிக்காவிற்கு வந்துள்ளது.

Recommended Video

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?

    இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் இந்தியா 35.82 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததுடன், மருந்து தயாரிப்பில் தேவையான ஒன்பது மெட்ரிக் டன் செயலில் உள்ள மருந்து மூலப்பொருளையும் அனுப்பி வைத்துள்து.

    இது தொடர்பாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்தூ வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் எங்கள் கூட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக ளித்தல். இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நெவார்க் விமான நிலையத்திற்கு வந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    என்னா தைரியம்!.. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி என்னா தைரியம்!.. திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி

    டிரம்ப் மிரட்டல்

    டிரம்ப் மிரட்டல்

    டிரம்ப், கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் தொலைப்பேசியில் பேசும்போது, மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் மருந்தைஅமெரிக்காவிற்கு தராவிட்டால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்கும் என்று மிரட்டினார். இதையடுத்து உலகிலேயே ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்யும் நாடானா இந்தியா, ஏப்ரல் 7 ம் தேதி அதற்கான தடையை நீக்கியது.

    சாதகமான முடிவு

    சாதகமான முடிவு

    அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் கோவிட் -19 க்கு சாத்தியமான சிகிச்சை அளிக்ககூடிய மருந்தாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் இது நியூயார்க்கில் 1,500 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப நிலையில் சாதகமான முடிவுகள் வந்ததால் எது பெரிதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த டிரம்ப், கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 29 லட்சத்துக்கும் அதிகமான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்கியுள்ளார்.

    இந்தியாவிற்கு நன்றி

    இந்தியாவிற்கு நன்றி

    இந்த மருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளதை அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர். டிரம்பின் ஆதரவாளரும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் நியூயார்க்கைச் சேர்ந்த அல் மேசன் கூறுகையில் "இந்தியாவின் இந்த மாபெரும் மனிதாபிமான நடவடிக்கையை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகள் கடந்த காலங்களை விட ஒன்றாக வந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

    பிரெஞ்சு ஆய்வில் தகவல்

    பிரெஞ்சு ஆய்வில் தகவல்

    "இந்தியா தனது நண்பர்களுக்கு ஒரு அற்புதமான தோள்கொடுக்கும் தோழன்" என்று டாக்டர் சம்பத் சிவாங்கி ட்வீட் செய்துள்ளார். இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,061 கோவிட் -19 நோயாளிகளின் புதிய பிரெஞ்சு ஆய்வின்படி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து சிகிச்சை அளித்த 10 நாட்களுக்குள் 91.7 சதவீதம் நோயை முற்றிலும் குணப்படுத்தியுள்ளது 15 நாட்களுக்குப் பிறகு 96 சதவீதமாக உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

    முதியவர்களுக்கு சோதனை

    முதியவர்களுக்கு சோதனை

    கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கான மருத்துவ சோதனை இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் டென்னசியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின்

    ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின்

    மலேரியா மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு ஆய்வுகளில், மருந்து ஆன்டிவைரல் செயல்பாட்டை நிரூபித்துள்ளது, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மாற்றும் திறன் காரணமாக கோவிட் -19 சிகிச்சையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்துக்கு வழிவகுக்கிறது. எனினும் இந்த மருந்தை பயன்படுத்தினால் பக்க விளைவாக இருதயத்தில் அடைப்பு, வலிப்பு நோய், தோலில் மாற்றம் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்ற ஆபத்துகளுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    எத்தனை டோஸ்

    எத்தனை டோஸ்

    எனினும் பல அமெரிக்க மருத்துவமனைகள் தற்போது கோவிட் -19 உடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு முதல் முயற்சியாக ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முறை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் 400 மி.கி தரப்படுகிறது. பின்னர் 200 மி.கி தினசரி இரண்டு முறை (இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை) இரண்டு அல்லது ஐந்து நாட்களுக்கு தரப்படுவதாக NIH (அமெரிக்கா) தெரிவித்துள்ளது.

    5லட்சம் பேர் பாதிப்பு

    5லட்சம் பேர் பாதிப்பு

    ஞாயிற்றுக்கிழமை (இன்றைய) நிலவரப்படி, உலகளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்., ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 20000க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். 5.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலகிலேயே மிக அதிகப்படியான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு உள்ள நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

    English summary
    35.82 lakh tablets of Hydroxychloroquine from India arrives in USA after Trump's intervention
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X