வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. 2ஆவது இடத்தை நெருங்கும் ரஷ்யா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் 2ஆவது இடத்தில் உள்ள பிரேசிலை ரஷ்யா பின்னுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை| Oneindia Tamil

    உலகளவில் கொரோனாவால் 54,01,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,43,799 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதுவரை 22,47,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 28 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    53 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இறப்பு விகிதம் 13 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 87 சதவீதமாகவும் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,66,828 ஆக உள்ளது.

    100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம். பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை100 கி.மீ. தூரம் நடை.. பலவீனமடைந்த கர்ப்பிணிக்கு பிரசவம். பிறந்த சில நிமிடங்களில் இறந்த குழந்தை

    டிரம்ப்

    டிரம்ப்

    இங்கு பலியானோர் எண்ணிக்கை 98,683 ஆக உள்ளது. தங்கள் நாட்டில் கொரோனாவால் 2 லட்சம் பேர் வரை உயிரிழக்கக் கூடும் என டிரம்ப் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியதால் மக்கள் கவலை கொண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,46,914 ஆக உள்ளது. மருத்துவமனையில் 11 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்பெயின்

    ஸ்பெயின்

    உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் 5 இடங்களை தாண்டி இருந்த பிரேசில் கொரோனா பரப்பும் மையாக இருந்த ஸ்பெயின், இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு நேற்று இரண்டாவது இடத்திற்கு வந்தது. இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,47,398 ஆக உள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 22,013 ஆக உள்ளது. இதுவரை 1.42 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    பிரேசில்

    பிரேசில்

    ரஷ்யாவும் பிரேசிலை போல் பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,35,882 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,388 ஆக உள்ளது. இதுவரை 1.07 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விரைவில் ரஷ்யாவும் பிரேசிலை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்திற்கு வரும் என அஞ்சப்படுகிறது.

    பிரிட்டன்

    பிரிட்டன்

    ஸ்பெயினில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2,82,370 ஆக உள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 28,678 ஆக உள்ளது. பிரிட்டனில் 2,57,154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,675 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இத்தாலியில் 2,29,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 32,735 ஆக உள்ளது.

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    பிரான்ஸில் 1,82,469 பேரும் ஜெர்மனியில் 1,79,986 பேரும், துருக்கியில் 1,55,686 பேரும், ஈரானில் 1,33,521 பேரும், இந்தியாவில் 1,31,423 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரப்பிய சீனாவை காட்டிலும் இந்தியாவில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது கவலையடையச் செய்துள்ளது. இங்கு 3,868 பேர் பலியாகிவிட்டனர். சிங்கப்பூரில் 31,068 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் பலியாகிவிட்டனர்.

    English summary
    Coronavirus world update: 54 lakh people infected by corona so far. Russia is going to overtake Brazil in infected numbers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X