வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா, ஐரோப்பாவில் கொரோனா 2வது அலை.. உலகம் முழுக்க 6,91,90,532 பேருக்கு கொரோனா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகம் முழுவதையும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நிலவி வருகிறது.

உலகம் முழுவதும் இன்றைய நிலவரப்படி, 6,91,90,532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,79,41,234 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 15 லட்சத்து 74 ஆயிரத்து 503 பேர் உயிரிழந்துள்ளனர்.

6,91,90,532 people worldwide have been confirmed infected with the corona virus

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 1,96,74,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,210 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 1,58,01,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,96,448 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 91,98,323. இந்தியாவில், கொரோனா பாதிப்பு 97,62,326 என்ற அளவில் உள்ளது. உயிரிழப்பு 1,41,735 என்ற அளவிலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 92,44,505 என்ற அளவிலும் உள்ளது.

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,232 பேருக்கு தொற்று.. 1,315 பேர் டிஸ்சார்ஜ்.. 14 பேர் உயிரிழப்பு..! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 1,232 பேருக்கு தொற்று.. 1,315 பேர் டிஸ்சார்ஜ்.. 14 பேர் உயிரிழப்பு..!

பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா, கொலம்பியா, ஜெர்மனி, மெக்சிகோ, போலந்து, ஈரான், பெரு, துருக்கி போன்றவை நோய் பாதிப்பில் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன.

English summary
As of today, 6,91,90,532 people worldwide have been confirmed infected with the corona virus. So far 4,79,41,234 people have recovered from the corona infection. Another 15 lakh 74 thousand 503 people have lost their lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X