வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,62,145 பேராக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது.

Recommended Video

    கொரோனாவுக்கு ரஷ்யா அனுமதி கொடுத்த தடுப்பு மருந்து

    உலகில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,62,145 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 3,77,152 லட்சமாக உள்ளது.

    63 lakh cases were infected with Coronavirus globally

    அது போல் இதுவரை உலகளவில் 29,00,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 53,407 பேர் மருத்துவமனைகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,59,320 ஆக உள்ளது. இங்கு பலியானோர் எண்ணிக்கை 1,06,925 ஆக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா உச்சம்- 2-வது நாளாக ஆயிரத்தை தாண்டியது- ஒரே நாளில் 1,162 பேருக்கு பாதிப்பு!தமிழகத்தில் கொரோனா உச்சம்- 2-வது நாளாக ஆயிரத்தை தாண்டியது- ஒரே நாளில் 1,162 பேருக்கு பாதிப்பு!

    பிரேசிலில் 5.29 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 30,046 பேராக உள்ளது. ரஷ்யாவில் 4,14,878 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4,855 ஆக உள்ளது. ஸ்பெயினில் 2,86,718 பேரும் பிரிட்டனில் 2,76,332 பேரும், இத்தாலியில் 2,33,197 பேரும் பிரான்ஸில் 1,89,220 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் 1,98,370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலியானோர் எண்ணிக்கை 5,608 ஆக உள்ளது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் 7ஆவது இடத்திற்கு வந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    63 lakh cases were infected with Coronavirus globally. There were 3.77 lakh deaths throughout the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X