வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4.31 லட்சமாகும்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சமாக உயர்ந்துள்ளது.

78 lakhs and more were affected by Corona in world level

இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 4.31 லட்சமாகும். குணமடைந்தோரின் எண்ணிக்கை 40 லட்சமாகும். மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 லட்சமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 1,17,526 ஆக உள்ளது. இதுவரை 8.54 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பிரேசிலில் 8.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 42 ஆயிரமாக உள்ளது. இதுவரை நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.27 லட்சமாகும்.

கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா வைரஸ் உறுதி கிரிக்கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கிலானிக்கு கொரோனா வைரஸ் உறுதி

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.20 லட்சமாகும். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 6,829 பேராக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.21 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் இங்கு பலியானோரின் எண்ணிக்கை 9,199 ஆகும்.

பிரிட்டனில் 2.94 லட்சம் பேரும், ஸ்பெயினில் 2.90 லட்சம் பேரும், இத்தாலியில் 2.36 லட்சம் பேரும், பெருவில் 2.20 லட்சம் பேரும் ஜெர்மனியில் 1.87 லட்சம் பேரும் ஈரானில் 1.84 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
78 lakhs and more were affected by Corona in world level. India is in 4th place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X