வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து 82 லட்சம் பேர் குணம்.. 50 லட்சம் ஆக்டிவ் நோயாளிகள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 82 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சுமார் 50 லட்சம் பேர் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,39,30,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 591,865 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,265,570 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 5,072,720 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

82 lakh people recover from corona infection in the world: 50 lakh active patients

உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 36,89,043 ஆக உயர்ந்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதிப்பு 20,14,738 ஆக உள்ளது. 3வது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,05,637 ஆக உயர்ந்துள்ளது

உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 1,299 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். 2வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்காவில் நேற்று 888 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 680 பேர் பலியாகி உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு 216 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர்.

Recommended Video

    Coronavirus May Gets Worse And Worse | WHO on Covid 19 | Oneindia Tamil

    உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67,406 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக
    பிரேசிலில் ஒரே நாளில் 43,829 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 3வது இடத்தை பிடித்துள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 35,468 பேர் பாதிக்கப்பட்டனர். இது இதுவரை இல்லாத அளவு ஆகும். தென் ஆப்பிரிக்காவில் ஒரே நாளில் 13,172 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    82 lakh people recover from corona infection in the world: 50 lakh active patients in worldwide, top three countrys US,Brazil, India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X