வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பில் 10 லட்சத்தை தாண்டிய பிரேசில்.. அமெரிக்க பாதிப்பில் கிட்டதட்ட பாதிக்கு பாதி!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87 லட்சத்தை தாண்டியது. பலியானோரின் எண்ணிக்கை 4.62 லட்சமானது.

உலக நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,57,748 ஆக உயர்ந்தது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 4,62,519 ஆக உயர்ந்தது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 46,25, 445 ஆகும்.

87 lakhs people were infected globally

அமெரிக்காவில் கொரோனாவால் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.21 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். 9.56 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை

அது போல் பிரேசிலில் 10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 49 ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். 5.20 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்கள். உலக கொரோனா பாதிப்பில் 7 அல்லது 8 இடங்களுக்கு பின்னரே பிரேசில் இருந்தது. இந்த நிலையில் தற்போது 2 ஆவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது.

87 lakhs people were infected globally

ரஷ்யாவில் 5.69 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 7,841 பேர் பலியாகிவிட்டனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.95 லட்சத்தை தாண்டியது. அதாவது 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலியானோரின் எண்ணிக்கை 12,970 ஆகும்.

பிரிட்டனில் 3,01,815 பேரும் ஸ்பெயினில் 2,92,655 பேரும், பெருவில் 2.47 லட்சம் பேரும், இத்தாலியில் 2.38 லட்சம் பேரும் சிலியில் 2.31 லட்சம் பேரும், ஈரானில் 2,00,262 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

English summary
87 lakhs people were infected globally and 4.62 lakhs casualities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X