• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அடேய் இங்கயும் வந்துட்டீங்களா? மெட்டாவெர்ஸ் பலாத்காரம்! விர்ச்சுவல் உலகில் வேலையை காட்டிய காமுகர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நவீன தொழில்நுட்ப உலகின் புதிய வரவான 'மெட்டார்வெர்ஸ்'ல் 21 வயதான பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னை சில ஆண்கள் விர்ச்சுவல் உலகில் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார்.

மெடாவெர்ஸ் என்ற விர்ச்சுவல் உலகம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது. உங்களுக்கென்ற விர்ச்சுவல் வடிவம் உருவாக்கி, நீங்கள் விரும்பும் உலகில் விர்ச்சுவலாக வாழ முடியும் என அறிவிக்கபட்டவுடன் ஆளாளுக்கு குஷியாகிப் போனார்கள்.

இணைய உலகின் அடுத்த கட்டம் தான் மெட்டா வெர்ஸ். META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் அர்த்தம்.

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்! பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்!

மெட்டாவெர்ஸ் உலகம்

மெட்டாவெர்ஸ் உலகம்

நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழ செய்யும் இடம் தான் மெடாவெர்ஸ். தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் இனி,மக்களை தங்களுக்கு பிடித்தமான தோற்றம் கொண்ட அவதார்களை உருவாக்கி மெய்நிகர் உலகில் வாழச் செய்ய போகிறது.

அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

திருமணங்கள், பார்ட்டிகள், முக்கிய நிகழ்ச்சிகள் என மெட்டாவெர்சில் அரங்கேறின. சமீபத்தில் தான் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா மெட்டாவெர்ஸ் குறித்த தொடக்க நிலையைக் கடந்து இரண்டாம் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் அதில் நடைமுறை சிக்கல்களும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது 21 வயதான பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், அடையாளம் தெரியாத அவதார்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்


காலநிலை மாற்றம், தொழிலாளர்களின் உரிமைகள், மனித உரிமைகள், விலங்கு உரிமைகள், ஊழல் மற்றும் கார்ப்பரேட் அதிகாரப் பறிப்பு போன்ற பிரச்சினைகளில் நிறுவனங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பான 'சம் ஆஃப் அஸ்' SumOfUs இது குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் பலர் மெட்டவெர்ஸில் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். மற்றொரு பெண்ணை ஓட்காவைக் குடிக்க கட்டாயப்படுத்தியதாகவும் புகார் கிளம்பியுள்ளது.

பாலியல் கொடுமை

பாலியல் கொடுமை

இதுகுறித்து விவரமாக கூறிய அந்த பெண், எனது அவதாரை பயன்படுத்தி மெட்டாவெர்ஸின் 'ஹாரிசான் உலகில் உலா வந்து கொண்டிருந்தேன், அப்போது சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு எனது அவதார் திசை தெரியாமல் வேறு எங்கோ சென்றது. அப்போது சில அடையாளம் தெரியாத விர்ச்சுவல் மனிதர்கள், பாலியல் ரீதியாக என்னை தாக்கினர். என் மூளையின் ஒரு பகுதி என்னை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர் என கூறியது. மற்றொரு பகுதி இது உண்மையான உடல் அல்ல விர்ச்சுவல் உலகம் தான் என உணர்த்தியது என கடும் மன உளைச்சலுடன் கூறினார்.

ஒரு மோசமான கனவு

ஒரு மோசமான கனவு

மேலும் "அது ஒரு மோசமான கனவு. ஆனால் அது நிஜம் போலவே இருந்தது. அந்த ஆண் அவதார்கள் என்னை தகாத முறையில் பேசினார்கள், முறைகேடாக நடந்து கொண்டார்கள், கண்ட இடத்தில் தொட்டார்கள், என் அருகில் இருந்த மற்றொரு பெண்ணின் வாயில் ஓட்காவை ஊற்றினார்கள், இந்த பயங்கரமான அனுபவத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற உடனடியாக மெடாவில் இருந்து வெளியேறி தனது கணக்கை நீக்கிவிட்டதாக அந்த பெண் கூறினார்.

மெடாவெர்ஸ் வருத்தம்

மெடாவெர்ஸ் வருத்தம்

மெடாவெர்ஸ் குறித்து அந்த பெண் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மெடாவின் செய்தியாளர், "இப்படி நடந்ததை அறிந்து வருத்தப்படுகிறோம். ஹாரிசான் வென்யூசில் இருக்கும் அனைவரும் நல்ல அனுபவங்களைப் பெற வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். மெடாவெர்சில் நண்பர்கள் அல்லாதவர்களுடன் தேவையற்ற தொடர்புகளைத் தவிர்ப்பதை எளிதாக்கும் வகையில், தனிப்பட்ட எல்லை கிட்டத்தட்ட 1 மீட்டர் வரை உள்ளது. ஆனால் அவர் இதனை பயன்படுத்தவில்லை என்றார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 40 வயதைக் கடந்த பெண் ஒருவர் தன்னை மெட்டாவெர்சிஸ் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த நிலையில், அந்நிறுவன பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A 21-year-old female researcher has filed a sensational complaint alleging that she was sexually abused by some men in the virtual world of the modern world of technology “Metaverse”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X