வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏ கொரோனாவே திரும்பி போ.. இந்த எழுத்துகளால் மக்கா சோள நிலத்தை செதுக்கிய விவசாயி.. வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் விவசாயி ஒருவர் தனது சோளம் பயிரிட்ட நிலத்தில் கோவிட் கோ அவே எனும் வடிவத்தில் பயிரிட்டுள்ளது சமூக வலைதலங்களில் வைரலாகியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா.

இங்கு இதுவரை கொரோனாவால் 54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 1.71 லட்சம் பேர் இறந்துள்ளனர். 28 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

அல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போன்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச்அல்லும் பகலும் தொடர்ந்து உழைப்போன்... இப்படை தோற்கின் எப்படை வெல்லும் - முதல்வர் பஞ்ச்

இயல்பு வாழ்க்கை

இயல்பு வாழ்க்கை

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.

விவசாயி

விவசாயி

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த விவசாயி ஒருவர் கொரோனாவே திரும்பி போ என கூறும் வகையில் நிலத்தில் வடிவமைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த விவசாயி ஒருவர் 13 ஏக்கரில் விவசாய நிலம் வைத்துள்ளார். அதில் பொதுமக்களை உற்சாகமூட்டும் வகையில் என்ன செய்யலாம் என யோசித்தார்.

13 ஏக்கர்

13 ஏக்கர்

அதன்படி விவசாய தோட்டத்தில் உள்ள சோள கொள்ளையில் COVID GO AWAY என்ற எழுத்துகளை பயிர்கள் மூலம் செதுக்கியிருந்தார். இந்த தோட்டத்தை ஏரியல் வியூவில் பார்த்தால் இந்த எழுத்துக்கள் தெரியும். அதற்கு ஏற்ப தன்னுடைய சாகுபடியை எழுத்துக்களாக செதுக்கியுள்ளார். அத்துடன் 13 ஏக்கரும் இணைவது கோடுகளையும் இணைத்து புதிய டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் அச்சம்

கொரோனாவால் அச்சம்

இதுகுறித்து அந்த விவசாயி ஜெரால்ட் ஜான்சன் தெரிவிக்கையில் மக்கள் கொரோனாவால் மிகவும் சோர்ந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே இந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன். இந்த இடத்தை பார்க்க அப்பகுதி மக்கள் வருகை தரும் போது அவர்கள் முகக் கவசத்துடனும் தனிமனித இடைவெளியுடனும் வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார்.

English summary
A Corn farm maze has Covid Go Away message in America which hits social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X