வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பின் லேடன் போன்று அல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சிரியாவில் இடுப்பில் குண்டை கட்டி வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதியின் உடல் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஐஎஸ்ஐஎஸ் எனப்படும் தீவிரவாத அமைப்பின் தலைவராக இருந்தவர் அபு பக்கர் அல் பாக்தாதி (48). மிக கொடூரமான அமைப்பின் தலைவரான பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தேடி வருகின்றனர்.

அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 177 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மறக்கவே முடியாத ஜெஸ்ஸிகா.. ஆனால் அமெரிக்கா சுதாரிச்சுச்சு பாருங்க.. நாம நிறைய கத்துக்கணும்!மறக்கவே முடியாத ஜெஸ்ஸிகா.. ஆனால் அமெரிக்கா சுதாரிச்சுச்சு பாருங்க.. நாம நிறைய கத்துக்கணும்!

3 குழந்தைகள்

3 குழந்தைகள்

இந்த நிலையில் சிரியாவில் இட்லிப் என்ற இடத்தில் பாக்தாதி இருப்பதை அறிந்த அமெரிக்க ராணுவம் அவர் இருந்த இடத்தை சுற்றி வளைத்தது. இதையடுத்து பாக்தாதியின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பாக்தாதி தனது 3 குழந்தைகளுடன் ஒரு குகைக்குள் ஓடினார்.

குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு

அவரை துரத்தி கொண்டு ராணுவ வீரர்கள் சென்றனர். அவர்களுடன் மோப்ப நாய்களும் துரத்தின. இறுதியில் தன் இடுப்பில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்த பாக்தாதி இந்த குண்டுவெடிப்பில் பலியானார்.

தகவல் இல்லை

தகவல் இல்லை

அவரது 3 குழந்தைகளும் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் பாக்தாதியின் உடல் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடல் எந்த கடல் பகுதியில் எப்போது வீசப்பட்டது என்பது குறித்து எந்த தகவல்களும் இல்லை.

வீடியோ

வீடியோ

ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியை பிடிப்பதற்கான ரெய்டின் போது இரு நபர்களை ராணுவத்தினர் பிடித்துள்ளனர். அவர்கள் ராணுவ காவலில் உள்ளனர். பாக்தாதி இறப்பு, ரெய்டு குறித்த வீடியோவோ போட்டோவோ இதுவரை வெளியிடப்படவில்லை.

கடலில் வீசப்பட்ட உடல்

கடலில் வீசப்பட்ட உடல்

கடந்த 2011-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உடலும் கடலிலேயே வீசப்பட்டது. அது போல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
ISIS leader Abu Bakr Al Baghdadi's body who killed himself during American troops raid in Syria, disposed at sea, says Pentagon sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X