வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலை போல் குவியும் ஆன்லைன் ஆர்டர்கள்.. வால்மார்ட் வெறிச்.. 1 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய அமேசான்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பீதியை தொடர்ந்து வழக்கமாக ஆன்லைன் செய்பவர்களைத் தாண்டியும் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு சென்றுவிட்டதால் அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனம் ஒரு லட்சம் பேரை பணிக்கு அமர்த்தியது.

கொரோனா விவகாரம் உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்த அரக்கன் போல் உள்ளது. இந்த அரக்கனை சமாளிக்க முடியாமல் உலகமே திணறி வருகிறது.

இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பல்வேறு அறிவுரைகள் அந்தந்த நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ஆர்டர்

ஆர்டர்

முகமூடிகளை பயன்படுத்த வேண்டும். சானிட்டைசர் பயன்படுத்தி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கூறி வருகின்றன. இதனால் மக்கள் வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கக் கூட வெளியே செல்வதில்லை. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பிரபல ஆன்லைன் தளங்களில் ஆர்டர் மக்கள் ஆர்டர் செய்து வருவதால் ஆங்காங்கே ஆர்டர் குவிகிறது. இதனால் வால்மார்ட் உள்ளிட்ட கடைகளில் வெறிச்சோடி காணப்படுகிறது.

பேக்கிங்

பேக்கிங்

வழக்கமாக ஆன்லைன் ஷாப்பிங் பயன்படுத்துவோரை காட்டிலும் அமெரிக்காவில் அதன் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு சானிட்டரி நாப்கின் வாங்கக் கூட மக்கள் வெளியே வர முடியாத சூழலால் ஆன்லைனில் வாங்குகின்றனர். இதனால் அமேசான் உள்ளிட்ட தளங்களில் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. ஆர்டரை எடுத்து பேக்கிங் பிரிவுகளுக்கு அனுப்பவும் ஆள் இல்லை.

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

இதனால் ஆர்டர்கள் மலை போல் பெருகி வருகின்றன. வாடிக்கையாளர்களும் பொருட்கள் கிடைக்காமல் அமேசான் உள்ளிட்ட எண்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு வருகிறார்கள். இதனால் அமேசான் நிறுவனமே ஸ்தம்பித்து போயுள்ளது. வாடிக்கையாளர்களின் அர்ச்சனையை கேட்க முடியாமலும் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ளாமலும் அமேசான் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆன்லைன்

ஆன்லைன்

இதை சமாளிக்க ஒரு லட்சம் ஊழியர்களை புதிதாக வேலைக்கு பணியமர்த்த பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான அமேசான் முடிவெடுத்துள்ளது. டெலிவரிக்காகவே பெரும்பாலான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மணிக்கு 15 டாலர்கள் சம்பளமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் மணிக்கு 17 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது அமேசான்.

English summary
Coronavirus fear: Amazon company recruits 1 lakh people sales executives as the order mounts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X