அமெரிக்காவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை.. சுகாதார அவசர நிலை அறிவிப்பு.. மக்களுக்கு எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அரசு பிரகடனம் செய்துள்ளது.
Recommended Video
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை கடும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், லட்சக்கணக்கானோரை காவு வாங்கியது. தற்போது இதன் தாக்கம் குறைந்து வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை வைரஸ், பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தி வருகிற குரங்கு அம்மை 75 நாடுகளில் பரவி இருக்கிறது.
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை.. நாடு முழுக்க மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு!

உலக சுகாதார அமைப்பு
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை அறிவித்தது. உலக நாடுகள் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் உலக நாடுகள் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் குரங்கு அம்மை
இந்தியாவில் முதன்முதலாக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஜூலை 14ம் தேதி குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரைத் தவிர, கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்நிலையில், வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரை சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே டெல்லியில் 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு
குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு பரவியுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா விளக்கம்
இதுகுறித்து அமெரிக்கா சுகாதாரத்துறை செயலாளர் சேவியர் பெசிரா கூறுகையில், அமெரிக்கா மக்கள் குரங்கு அம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அவசர நிலை குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.