வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்...பிசிஜி ஊசி உயிரிழப்பை குறைக்கும்...புதிய ஆய்வில் தகவல்!!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பிசிஜி தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் 30 நாட்களுக்கு தொற்று நோய் பரவுவதை தடுக்கலாம் என்று அமெரிக்க ஆய்வு பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதியவர்களிடம் இந்த ஊசியை சோதிப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் அறிவியல் அட்வான்ஸ் என்ற பேப்பரில் இந்த செய்தி வெளியாகி இருக்கிறது. பிசிஜி தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் அடுத்த 30 நாட்களுக்கு கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் குறையும் என்று அந்தப் பேப்பரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

America research paper says that BCG injection will reduce Coronavirus death and build immunity

அமெரிக்காவில் இந்த ஊசியை அனைவருக்கும் கட்டாயம் போட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தால், மார்ச் 29ஆம் தேதி வரை உயிரிழந்த 2,467 பேரில் 468 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பார்கள் என்கிறது அந்த ஆய்வு. இந்தியா, சீனாவில் இந்த ஊசியை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதால், அந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் குழந்தை பிறந்த 15 நாட்களில் காச நோயைத் தடுக்க பிசிஜி ஊசி போடப்படுகிறது. இந்த ஊசியை போட்டுக் கொள்வதன் மூலம் மற்ற தொற்று நோய்களும் கட்டுப்படுகிறது. ஆனால், அதேசமயம், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் தடுப்பு ஊசி போடப்படுகிறது. ஆனாலும் இந்த இரு நாடுகளிலும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்த அறிக்கைகைக்கு எதிராக விவாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது.

கல்லறையில்.. 2 மணி நேரம் கிடந்த நர்ஸ் அர்ச்சனாவின் சடலம்.. போராடி நல்லடக்கம்.. ராணிப்பேட்டை பரபரப்புகல்லறையில்.. 2 மணி நேரம் கிடந்த நர்ஸ் அர்ச்சனாவின் சடலம்.. போராடி நல்லடக்கம்.. ராணிப்பேட்டை பரபரப்பு

இதுகுறித்து இந்திய இயற்பியல் கல்லூரியின் டீன் டாக்டர் ஷஷாங்க் ஜோஷி அளித்திருக்கும் பேட்டியில், ''உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதற்கும், கொரோனாவை தடுக்கவும் பிசிஜி தடுப்பு மருந்து கொடுக்கலாம். போர்ச்சுகல் நாட்டில் இந்த தடுப்பு மருந்தை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ஆதலால் அங்கு கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதுவே அதன் அருகில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இதற்குக் காரணம் அங்கு இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்வது இல்லை'' என்றார்.

English summary
America research paper says that BCG injection will reduce Coronavirus death and build immunity
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X