வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த சதி.. அமெரிக்காவின் வார்னிங்கையாவது காதில் போட்டுக் கொள்ளுமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 350 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு உள்ளூர் இயக்கமான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புதான் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் இந்த சம்பவத்துக்கு காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தவ்ஹீத் ஜமாத்தை வளர்த்தது கோத்தபாய.. பகீர் குற்றச்சாட்டு இலங்கை குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தவ்ஹீத் ஜமாத்தை வளர்த்தது கோத்தபாய.. பகீர் குற்றச்சாட்டு

தீவிரவாத தலைவர்

தீவிரவாத தலைவர்

இதையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை ராணுவம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாத தலைவர் அபு பக்ர் அல்- பாக்தாதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடவடிக்கை

நடவடிக்கை

சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அதை அவர் வெளியிட்டதன் மூலம் அவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் கூறுகையில் இலங்கை குண்டுவெடிப்பு எங்கள் அமைப்பின் பழி வாங்கும் நடவடிக்கையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செலவு

செலவு

இதுகுறித்து இலங்கை புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் மூளையாக கூறப்படும் ஜஹ்ரான் ஹாசிம் தமிழகத்தின் அருகில் உள்ள இடங்களில் நேரத்தை செலவிட்டுள்ளார். ஆனால் அவர் இலங்கை குண்டுவெடிப்பில் பலியாகிவிட்டார். மேலும் மூவர் அம்பாறை மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகிவிட்டனர்.

இலங்கை

இலங்கை

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு ஒரு எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்துள்ளது. கொழும்புவில் உள்ள தூதரகத்தின் மூலம் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

அதில் "தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இலங்கையில் இன்னமும் பிடிப்படாமல் இருக்கிறார்கள். அவர்களிடம் பயங்கர சேதத்தை ஏற்படுத்தும் வெடி பொருள்கள் இருக்கின்றன. அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

ஈஸ்டர் பண்டிகையின் போது தாக்குதல் நடத்தப்படும் என இந்தியா இரு முறை எச்சரித்தும் அதை இலங்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்காவின் எச்சரிக்கையையாவது காதில் வாங்கிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Sri Lankan officials and U.S. diplomat warn of more attacks by militant group.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X