வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2,200 படை வீரர்கள் தாயகம் திரும்புகிறார்கள்.. ஈராக்கில் படைகளை குறைக்க அமெரிக்கா முடிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்த மாதம் ஈராக்கில் தனது படை இருப்பை 5,200 லிருந்து 3,000 ஆக குறைப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. படையை குறைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வந்ததால் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு இப்போது முதல் முறையாக வெளியாகி உள்ளது.

ஜூன் மாதத்தில் அமெரிக்காவும் ஈராக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்த நிலலையில் இப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈராக்கில் நிரந்தர ராணுவ தளங்களை அல்லது நிரந்தர இராணுவ இருப்பை பராமரிக்கும் எந்த திட்டமும் இல்லை என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது.

 American military presence in Iraq will be reduced from 5,200 to 3,000 troops this month

ஐ.எஸ்.ஐ.எல் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற ஆயுதக் குழுவை எதிர்த்துப் போராடுவதற்காக ஈராக்கில் சுமார் 5,200 அமெரிக்கா ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். அமெரிக்கத் தலைமையிலான அதன் கூட்டணி நாடுகள் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழித்தன. இப்போது உள்ள சில சிறிய குழுக்களை ஈராக் படைகளே கையாண்டு வருகின்றன.

முதல்முறையாக ஒன்று கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ்... என்ன பேசினார்கள்முதல்முறையாக ஒன்று கூடிய இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ்... என்ன பேசினார்கள்

இதனால் தான் 5,200 லிருந்து 3,000 ஆக படைகளை அமெரிக்கா குறைத்துள்ளது. இந்த படை குறைப்ப இந்த மாதத்தில் இருந்து அமலுக்கு வருவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார், அமெரிக்க படையினர் 2200 பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு விரைவில் திரும்பி செல்ல உள்ளனர்.

Recommended Video

    ஈராக்கில் படைகளின் இருப்பை குறைக்கும் அமெரிக்கா.. தாயகம் திரும்பும் படை வீரர்கள்

    இதனிடையே விரைவில் ஆப்கானிஸ்தானில் இருந்தும் படைகளை குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. எனவே வரும் நாட்களில் அதற்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    English summary
    American military presence in Iraq will be reduced from 5,200 to 3,000 troops this month, US Central Command announces.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X