வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருப்பினர் படுகொலை.. சிக்கித் தவிக்கும் டிரம்ப்.. அதிபர் தேர்தலில் வச்சு செய்ய போகும் அமெரிக்கர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கருப்பினர் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் சர்ச்சைக்குரிய விவகாரங்களை கூறி வரும் டிரம்பிற்கு அதிபர் தேர்தலில் அமெரிக்கர்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.

Recommended Video

    அமெரிக்காவில் தொடரும் போராட்டம்... தயார் நிலையில் ராணுவம்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நபர் என சொல்லலாம். டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் குடியுரிமை விவகாரம், எச் 1 விசா போன்றவற்றில் அதிரடி காட்டி அமெரிக்கர்கள் மத்தியில் அதிருப்தியை பெற்றார்.

    கொரோனா உலக நாடுகளில் பரவி வந்த நிலையில் அமெரிக்காவில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பரவியது. அப்போது அமெரிக்காவில் ஊரடங்கிற்கு உத்தரவிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டனர்.

    கருப்பினத்தவர் கொலை.. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் கலவரம்.. ராணுவம் தயார் நிலைகருப்பினத்தவர் கொலை.. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் கலவரம்.. ராணுவம் தயார் நிலை

    ஒரு லட்சம் பேர்

    ஒரு லட்சம் பேர்

    ஆனால் டிரம்போ அதெல்லாம் முடியாது என கூறிவிட்டு தற்போது ஒரு லட்சம் பேர் கொரோனாவால் இறக்கும் நிலைக்கு நாட்டை கொண்டு சென்றார். அது போல் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை தளர்த்துவேன் என்றும் இதனால் யார் கொரோனாவால் இறந்தாலும் சரி என்றும் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்றும் டிரம்ப் பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    மற்ற நாடுகள் மக்களின் உயிரும் முக்கியம், வாழ்வாதாரமும் முக்கியம் என கூறியுள்ள நிலையில் அதிக இழப்புகளை கொண்ட நாடான அமெரிக்காவின் அதிபர் இவ்வாறு பேசியதற்கு அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக கொரோனாவை அழிக்க நோயாளிகள் உடலில் சானிடைசர்களை ஏற்ற வேண்டும், அகஊதா கதிர்களையும் செலுத்த வேண்டும் என கூறி டாக்டர்கள், விஞ்ஞானிகளையே அதிரச் செய்தார்.

    அதிகாரி

    அதிகாரி

    பின்னர் தான் விளையாட்டுக்காக அப்படி சொன்னதாகவும் கூறினார். இந்த நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் போலீஸ் அதிகாரியால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கருப்பின மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். வன்முறையும் வெடித்தது.

    டிரம்ப்

    டிரம்ப்

    இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள டிரம்ப் இந்த குண்டர்கள் ஜார்ஜ் பிளாய்டிற்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அசம்பாவிதம் நேர்ந்தால் நிலைமை கட்டுப்படுத்தப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப்.

    திராணி

    திராணி

    இதுகுறித்து அமெரிக்க பாப் பாடகி தனது ட்விட்டர் பக்கத்தில் டிரம்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் உங்கள் அதிபர் பதவி காலத்தில் வெள்ளை இன மக்களின் ஆதிக்கம் மற்றும் இனவெறி ஆகியவற்றை கொண்டு நெருப்பை தூண்டுவிட்டுள்ளீர்கள். வன்முறையை தூண்டிவிடுவதற்கு முன்னர் உங்கள் தலைமைப் பண்பை உணர்த்த உங்களுக்கு திராணி இருக்கிறதா?

    அதிபர் தேர்தல்

    அதிபர் தேர்தல்

    என்னாது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவீர்களா, நடத்தித்தான் பாருங்களேன்.. நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் உங்களை தோற்கடித்து வெள்ளை மாளிகையிலிருந்து வீட்டுக்கு அனுப்புகிறோம் என கடுமையாக விமர்சித்துள்ளார். இது போல் டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ள அமெரிக்கர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலின் போது தோற்கடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    English summary
    Americans are going to out Donald Trump from White house in the November election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X