வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்தீ... ஒத்த வார்த்தையால் மொத்த அமெரிக்க தமிழர்களின் மனதையும் அள்ளிட்டாரே.. கமலா ஹாரீஸ்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் அவரது உரையில் சித்தி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்க வாழ் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார் கமலா ஹாரீஸ்.

Recommended Video

    US Election 2020 : Kamala Harris-ஐ Joe Biden தேர்வு செய்ய காரணம் | Oneindia Tamil

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பே மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் டிரம்பை எதிர்த்து ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

    இருவரும் தனது பிரசாரங்களை கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஜோ பிடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிரசாரத்தில் பேசுகையில் நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்க வாழ் தமிழரான கமலா ஹாரீஸை துணை அதிபராக நியமிப்பேன் என்றார்.

    கோயில் சுவற்றில் கமலா ஹாரிஸ் பெயர்...சகோதரி மாயா மகள்...மீனா ஹாரிஸ் ஆச்சரியப் பதிவு!! கோயில் சுவற்றில் கமலா ஹாரிஸ் பெயர்...சகோதரி மாயா மகள்...மீனா ஹாரிஸ் ஆச்சரியப் பதிவு!!

    கமலா ஹாரீஸ்

    கமலா ஹாரீஸ்

    இதையடுத்து அமெரிக்காவில் கமலா ஹாரீஸை கொண்டாடினர். இவர் நிச்சயம் இனவாதத்திற்கு எதிராக போராடுவார் என்பதால் கருப்பினத்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவரது தாய் இந்தியராக இருந்தாலும் தந்தை ஜமைக்கா நாட்டவர். எனவே கமலா ஹாரீஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அவர் கருப்பினத்தை சேர்ந்த முதல் துணை அதிபர் என்ற பெருமையையும் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையையும் பெறுவார்.

    ஆஃபர்

    ஆஃபர்

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்களை நேற்றைய தினம் ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில் ஜனநாயக கட்சியின் ஆஃபரை ஏற்றுக் கொண்டு கமலா ஹாரீஸ் மக்கள் முன்பு தனது உரையை நிகழ்த்தினார்.

    ஜோ பிடன்

    ஜோ பிடன்

    அப்போது அவர் டிரம்பை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில் நமது துன்பங்களை டிரம்ப் அரசியல் ஆயுதங்களாக மாற்றிவிட்டார். எனவே அமெரிக்கர்கள் அனைவரும் ஜோ பிடனுக்கு வாக்களியுங்கள். ஒரு அதிபர் நம் அனைவரையும் ஒன்றிணைப்பார் என்றால் அது ஜோ பிடன்தான் என்றார் கமலா ஹாரீஸ்.

    அமெரிக்கர்கள்

    அமெரிக்கர்கள்

    அவரது பேச்சில் அவர் பயன்படுத்திய ஒருவார்த்தை இந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர்ந்தது. அவர் சித்தி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தினார். இதையடுத்து சித்தி என்றால் ஆன்ட் என்பதால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை அமெரிக்கர்கள் கூகுளில் அதிக அளவில் தேடி பார்த்தனர். அமெரிக்க ஜனநாயக கட்சி உரையில் முதல் முறையாக தமிழ் வார்த்தையை ஒருவர் பேசியது அமெரிக்கர்களை மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை கொடுத்தது. கமலா ஹாரீஸ் குறித்து அவரது சித்தி சாரதா கோபாலன், நான் கமலாவை பார்க்க வேண்டும் என கூறினால் அடுத்த நாளே என் கண் முன் வந்துவிடுவார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

    கமலா ஹாரீஸ்

    கமலா ஹாரீஸ்

    சித்தி என்ற வார்த்தை ஏன் இத்தனை முக்கியத்துவம் என்பதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. தமிழகத்தில் சித்தி... என்றாலே அந்த உறவு முறை மறந்து ராதிகாதான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு மக்களை பார்ட் 1 மூலம் குதூகலப்படுத்திய ராதிகா தற்போது பார்ட் 2 மூலம் அன்றாடம் வீட்டு வரவேற்பறைக்கே வந்து தமிழக மக்களின் மனதை கொள்ளை கொள்கிறார். ராதிகாவுக்கென சீரியல் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். உலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் ராதிகாவின் சீரியல்களை விடுவதில்லை. அந்த வகையில் கமலா ஹாரீஸும் சித்தீ.... என கூறி அமெரிக்க வாழ் தமிழர்களின் மனதில் நங்கூரம் இட்டது போல் இடம்பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

    English summary
    Americans googled after Kamala Harris speech as she used the tamil word Chithi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X