வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓமிக்ரான் எதிரொலி.. வேக்சின் போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு & அபராதங்கள்.. அதிரடி காட்டும் அரசு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பதால், அது தொடர் கதையைப் போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகளே அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில் தற்போது கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வகை அடுத்த குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன.

முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய .. பாஜக மாநில நிர்வாகி அகோரம் திடீர் கைது.. சீர்காழியில்..!முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய .. பாஜக மாநில நிர்வாகி அகோரம் திடீர் கைது.. சீர்காழியில்..!

ஜெர்மனி -இஸ்ரேல்

ஜெர்மனி -இஸ்ரேல்

ஜெர்மனியும் இஸ்ரேலும் கிட்டதட்ட கொரோனா வேக்சினை கட்டாயமாக்கும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். கிரீஸ் நாட்டில் வேக்சின் போட மறுப்பவர்களுக்கு அபராதங்களை அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாதவர்களுக்குப் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. வேக்சின் போடாதவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துள்ள போதிலும், ஓமிக்ரான் கொரோனாவால் பல நாடுகளும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன.

கிரீஸ் நாடு

கிரீஸ் நாடு

கிரீஸ் நாட்டில் அடுத்த மாதம் முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கு வேக்சின் கட்டாயமாக்கப்படுகிறது. 60 வயதைத் தாண்டியவர்கள் வேக்சின் செலுத்த மறுத்தால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் 100 யூரோ அபராதமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்த உள்ள 5.80 லட்சம் பேர் உள்ள நிலையில், அவர்களில் 60 ஆயிரம் பேர் மட்டுமே வேக்சின் செலுத்தியுள்ளனர்.

ஆஸ்திரியா

ஆஸ்திரியா

மேற்கு ஐரோப்பாவில் மிக மந்தமாக வேக்சின் செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் நாடாக ஆஸ்திரியா உள்ளது. அங்கு ஏற்கனவே டிசம்பர் 15 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வேக்சின் செலுத்தியவர்களுக்கும் கொரோனாவில் இருந்து சமீபத்தில் குணமடைந்தவர்களுக்கும் மட்டுமே சில தளர்வுகளை அறிவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மேலும். வரும் பிப்ரவரி மாதம் முதல் வேக்சினை கட்டாயமாக்க ஆஸ்திரியா முடிவு செய்துள்ளது. வேக்சின் போட மறுப்பவர்களுக்கு 7200 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Array

Array

பின்லாந்து நாட்டில் வேக்சின் போடாதவர்களுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் பார்கள் மற்றும் உணவகங்களில் அனுமதி இல்லை. அவர்களுக்கு மதுவும் விற்பனை செய்யப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வருவோர் முழுமையாக 2 டோஸ் வேக்சின் போடவில்லை என்றால் அவர்களை வரும் டிசம்பர் 1 முதல் நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என ஸ்பெயின் அறிவித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Array

Array

அலுவலகங்களில் வேக்சினை கட்டாயமாக்கத் தனியார் நிறுவனங்களுக்கு ஹங்கேரி அரசு அனுமதி அளித்துள்ளது. வேக்சின் போடாதவர்களுக்குச் சம்பளத்தை நிறுத்தி வைக்கவும் அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. சிங்கப்பூர் நாட்டில் வேக்சின் செலுத்த மறுப்பவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கான மருத்துவச் செலவை அரசு ஏற்காது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரு நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்தால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை கொரோனா நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் வேக்சினை கட்டாயமாக்கியதால் மட்டும் சுமார் 5% பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Many countries making vaccination mandatory. Omicron Corona's latest news in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X