வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் தனது பதவி காலத்தில் 30573 பொய்களை கூறி இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளது. அதில் பாதி பொய் அவரது பதவி காலத்தின் கடைசி ஆண்டில் கூறப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

ஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது என்று நடிகர் கவுண்டமணி சொல்வார். அது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நிச்சயம் டிரம்புக்கு நிச்சயம் பொருந்தும். பதவி காலத்தில் அந்த மனிதர் அந்த அளவுக்கு பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது 2017ம் ஆண்டு. ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அதிபரானார். பதவி ஏற்று சத்திய பிரமாணம் செய்து உதிர்த்த முதல் வார்த்தையில் தொடங்கி பொய்களையே மூலதனமாக கொண்டு டிரம்ப் செயல்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மழை

மழை

டைம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் தோன்றியதற்காக "ஆல்-டைம் ரெக்கார்ட்" வைத்திருப்பதாக சொன்ன பொய்யில் தொடங்கி, மழை, கொரோனா வைரஸ், எதிர்க்கட்சிகளின் மீதான குற்றச்சாட்டு, தேர்தல் முறைகேடு வரை எத்தனையோ பொய்களை அவிழ்த்துவிட்டார். அதாவது சாதாரண பிரச்சனை தொடங்கி முக்கியமான பிரச்சனை வரை பல விவகாரங்களில் தவறான கருத்தை கூறினார்.

கோரிக்கை அதிகரிப்பு

கோரிக்கை அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்வதை ஆரம்பித்தில் ஆச்சர்யத்துடன் பார்த்த மக்கள், போகபோக அவரது பொய்யை இனம் கண்டு கொண்டனர். அவர் சொல்வது பொய் என உரிமை கோருவது அதிகரித்தது. பெரும்பாலும் பிரச்சாரம் அல்லது ட்வீட்டின் போதே பொய்களை கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

ட்ரம்ப் இறுதி நாட்களில் கூறிய கொரோனா வைரஸ் தொற்று பற்றிய பொய் தான் மோசமானது. கொரோனா நோய் "ஒரு அதிசயம் போல" மறைந்துவிடும் என்றும், அதிபர் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டது என்றும் கூறியதுதான். இதில் கொடுமை என்னவென்றால் இவர் போட்ட பொய் ட்விட்டை நம்பி ஜனவரி 6 ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் மிருகத்தனமாக தாக்கியதும், அதில் 5 பேர் இறந்ததும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

30,573 பொய்கள்

30,573 பொய்கள்

டிரம்ப் தனது பதவி காலத்தில் 30,573 தவறான பொய்களை கூறியிருக்கிறார். அதில் கிட்டத்தட்ட பாதி இந்த ஆண்டில் சொன்னது. எப்படி இவ்வளவு பொய்களை கூறினார் என்பதை அளவெடுத்தார்கள் என்பது அமெரிக்கர்களுக்கே வெளிச்சம். ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக,அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் கூறும் தகவல்களின் துல்லியத்தை உண்மைச் சரிபார்ப்பு மதிப்பிட்டுள்ளது, அந்த நடைமுறை எப்போதுமே தொடருமாம். அதில் தான் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த வார பொய்கள்

இந்த வார பொய்கள்

டிரம்பின் பல கூற்றுக்கள் முழு அளவிலான உண்மை சோதனைகளுக்கு தகுதியற்றவையாகவே இருந்துள்ளது. வாரம் வாரம் டிரம்பின் பொய்கள் ஆராயப்பட்டுள்ளது. இந்நிலையில் வாரம் வாரம் நிலைமைய ஆய்வு செய்யும் அளவுக்கு மாறி உள்ளது. "இந்த வாரம் ட்விட்டரில் ட்ரம்ப் என்ன தவறு செய்தார்" - டிரம்பின் முதல் 100 நாட்களில் என்ன பொய் சொன்னார், வருடத்தில் என்ன பொய் சொன்னார் என்பதாக பதிவு செய்ய தொடங்கினார்கள். இப்படி நான்கு வருடமும் ஆராயப்பட்டதில் தான் அவர் 30,573 பொய்களை(ஏக்கர் கணக்கில்) கூறியது தெரியவந்தது.

English summary
Trump averaged about six claims a day in his first year as president, 16 claims day in his second year, 22 claims day in his third year - and 39 claims a day in his final year. Put another way, it took him 27 months to reach 10,000 claims and another 14 months to reach 20,000. He then exceeded the 30,000 mark less than five months later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X