வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூமியின் சுற்று வட்டப்பாதையின் மீது மோதும் சிறுகோள்... எப்போது... ஆபத்தா?

Google Oneindia Tamil News

நாசா: போயிங் 747 ஜெட் விமானத்தை விட அளவில் பெரியதாக இருக்கும் சிறுகோள் ஒன்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நாளை மோத இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. 2020 RK2 எனப்படும் இந்த சிறுகோளை கடந்த சில வாரங்களாகவே கண்காணித்து வருவதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகள் இந்த சிறுகோளை கடந்த மாதம் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிறுகோள் அப்போலோ சிறுகோள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையிலான சிறுகோள்கள் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

Asteroid size in Boeing 747 Jet Will Collide With Earth’s Orbit

பூமியின் சுற்று வட்டப்பாதையை இந்த சிறுகோள் ஒரு விநாடிக்கு 6.68 கி. மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இந்த வேகம் மனிதர்களுக்கு அதிவேகமாக இருக்கலாம். ஆனால், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நகர்ந்து செல்வதால் இது வேகமாக கருதப்படாது.

2020 RK2 என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சிறுகோள் 36 மீட்டர் முதல் 81 மீட்டர் வரையிலான விட்டம் கொண்டது. அதாவது 118 முதல் 256 அடி நீளமானது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கோளை பூமியில் இருந்து பார்க்க முடியாது. நாளை மாலை (அக்டோபர் 7ஆம் தேதி) பிரிட்டன் நேரப்படி 6.12 மணிக்கு பூமியின் சுற்று வட்டப்பாதையை கடந்து செல்லும்.

பூமியில் இருந்து 38,27,797.34 கி. மீட்டர் தொலைவில் இந்த சிறுகோள் கடந்து செல்வதால் பயப்பட வேண்டியதில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம் பூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் பல டஜன் கணக்கில் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு சிறுகோள்கள் வருகின்றன. ஆனால், இவற்றில் பல பூமியின் சுற்று வட்டப்பாதையின் மீது மோதுவதில்லை. 2020 RK2 என்ற கோளை விட சிறியதாக பெரும்பாலான கோள்கள் இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த 2020 RK2 என்ற சிறுகோள் மீண்டும் 2027 ஆம் ஆண்டு வரை பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Asteroid size in Boeing 747 Jet Will Collide With Earth’s Orbit tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X