வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிகப்பெரிய சிறுகோள்... நாளை பூமியின் சுற்றுப்பாதையை கடக்கிறது... பூமியை தாக்குமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பூமியின் சுற்று வட்டப்பாதையை நாளை எகிப்து நாட்டின் கிஸ்ஸாவில் இருக்கும் பிரமிட் அளவைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் சிறுகோள் ஒன்று கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்த கோளுக்கு 465824 (2010 FR) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விட்டம் 120 மீட்டர் மற்றும் 270 மீட்டராக இருக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறுகோள் பூமியின் எந்தப் பாகத்தையும் தாக்காது என்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

asteroid twice as big as the iconic Pyramid of Giza pass through earth orbit tomorrow

இதுகுறித்து நாசா சிறுகோள் கண்காணிப்பாளர்கள் பதிவிட்டு இருக்கும் ட்விட்டில், ''எந்த வகையிலும் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை. பாதுகாப்பாக செப்டம்பர் 6ஆம் தேதி பூமியின் சுற்றுப் பாதையில் கடந்து செல்லும். பூமியில் இருந்து 4.6 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும். அதாவது நமது நிலவின் தொலைவைவிட 16 மடங்கு அதிகமாகும்'' என்று தெரிவித்துள்ளது.

asteroid twice as big as the iconic Pyramid of Giza pass through earth orbit tomorrow

பூமியின் சுற்றுப் பாதையில் செல்வதால் இந்த சிறுகோளுக்கு அப்பல்லோ சிறுகோள் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் இந்த சிறுகோள் 31,400 மைல்கள் வேகத்தில் கடந்து செல்லும். இந்த சிறுகோள் 2010ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இருந்தே இந்த சிறுகோளை நாசா கண்காணித்து வருகிறது.

பல்பை கண்டுபிடிச்சது தாமஸ் ஆல்வா எடிசன் கிடையாது.. ஒரு கருப்பர்.. சர்ச்சையில் ஜோ பிடன் பல்பை கண்டுபிடிச்சது தாமஸ் ஆல்வா எடிசன் கிடையாது.. ஒரு கருப்பர்.. சர்ச்சையில் ஜோ பிடன்

பூமியின் சுற்று வட்டப் பாதையை இதுபோன்று சிறுகோள்கள் கடப்பது இது முதன் முறையல்ல. இதற்கு முன்பும் சிறுகோள்கள் கடந்து சென்றுள்ளன. விண்மீன்கள் கடந்து சென்றுள்ளன. இவை பூமியின் மீது அன்றாடம் மோதி வெடித்து வருகின்றன. அப்போது பெரிய அளவில் பூமியின் மேற்பரப்பில் ஒளி தெரியும்.

நமது சூர்ய மண்டலத்தின் ஆரம்பகால எச்சங்களில் இருந்து உருவானதுதான் சிறுகோள் என்று கூறப்படுகிறது. இவை 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது. சில சமயங்களில் இவை சிறிய கிரகங்கள் என்றும் அழைக்கபப்டுகின்றன. சிறிய பாறைகள் போன்று இருக்கும் இவை செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அனைத்து சிறு கோள்களும் சரியான வடிவத்தில் இல்லாமல் இருக்கும். சிறுகோள்கள் நீள்வட்ட சுற்றுப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை சுழன்றும் செல்லும். அப்போது தவறுதலாக தடுமாறிச் செல்லும்.

English summary
asteroid twice as big as the iconic Pyramid of Giza pass through earth orbit tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X