வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. சாதித்துவிட்டோம், இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவிற்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி வரும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை எட்டியுள்ளது என்றும் ஒப்புதலுக்காக இறுதி செய்யப்படுவதற்கு மிக அருகில் உள்ளது என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்டத்தில் இருக்கிறது. ரஷ்யா உருவாக்கி உள்ள தடுப்பூசியும் 3ம் கட்டத்தில் இருக்கிறது. சீனாவின் தடுப்பூசியும் 3ம் கட்டத்தில் தான் இருக்கிறது.

மருத்துவ பரிசோதனையில் 3ம் கட்டம் என்பது இறுதிகட்டமாகும். இந்த இறுதிகட்ட சோதனையில் மனிதர்களுக்கு கொடுத்து தடுப்பூசி பரிசோதிக்கப்படும். அதில் எந்த அளவிற்கு பக்கவிளைவுகள் வருகின்றன. யாருக்கும் பாதிப்பு வருகிறதா என்பது முழுமையாக ஆய்வு செய்யப்படும். இதில் பக்க விளைவு இல்லை அல்லது சாதாரண பக்கவிளைவு என்றால் மட்டும் மருந்து வெற்றி பெறுகின்றன. அதற்குத்தான் இறுதி கட்டத்தில் உள்ள தடுப்பூசிகளை வல்லரசு நாடுகள் போராடி வருகின்றன.

4 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா...உயிரிழப்பு...மத்திய ஆய்வுக்குழு நியமனம்!! 4 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா...உயிரிழப்பு...மத்திய ஆய்வுக்குழு நியமனம்!!

3ம் கட்ட பரிசோதனை

3ம் கட்ட பரிசோதனை

இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்தாண்டு ஆரம்பிக்கும் முன்பு மக்களுக்கு தடுப்பூசியை கொண்டு சேர்க்க வேண்டும் என்று வல்லரசு நாடுகள் போராடி வருகின்றன. இதற்காக பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து காத்திருக்கின்றன. இந்த லிஸ்டில் உலகின் பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவும் இருக்கிறது. இந்நிலையில்
கொரோனாவிற்கு எதிராக அமெரிக்கா உருவாக்கி வரும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை எட்டியுள்ளது என்றும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மிக நெருக்கமான நிலை

மிக நெருக்கமான நிலை

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி 3 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை எட்டியுள்ளது. இறுதி முடிவுக்கு மிக நெருக்கமான நிலையை எட்டியுள்ளது என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அமெரிக்காவில், சாத்தியமில்லை என்று மக்கள் நினைத்த காரியங்களை நாங்கள் செய்கிறோம். தடுப்பூசியை கண்டுபிடிக்க நீண்டகாலம் ஆகும் என்று என்று கூறப்பட்ட நிலையில் எங்கள் அரசு சில மாதங்களில் செய்திருக்கிறது" என்று டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்..

30000 தன்னார்வலர்கள்

30000 தன்னார்வலர்கள்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி அமெரிக்காவில் 80 தளங்களில் சுமார் 30,000 தன்னார்வலர்களை வைத்து சோதிக்க சேர்ப்பதாக அஸ்ட்ராஜெனெகா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஸ்ட்ராஜெனெகா வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா முழுவதிலும் உள்ள சோதனை மையங்களில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது வந்த 30,000 வயது வந்தவர்களை சோதிக்க போகிறோம். ஆரோக்கியமான மற்றும் நிலையான அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள், ஹெச்ஐவி உடன் வாழ்பவர்கள் மற்றும் மாறுபட்ட நிலப்பரப்பில் வந்தவர்கள் என பலரிடம் சோதிக்க போகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

30 கோடி டோஸ் மருந்து

30 கோடி டோஸ் மருந்து

3ம் கட்டம் சோதனை அமெரிக்காவில் ஆபரேஷன் வார்ப் வேகத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறது, இது ஜனவரி 2021 க்குள் COVID-19 க்கு 300 மில்லியன் (30 கோடி) டோஸ் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் பந்தயத்தில் அஸ்ட்ராஜனெகாவும் ஒன்று. 3ம் கட்ட சோதனைகளில் , மாடர்னா இன்க் மற்றும் ஃபைசர் இன்க் போன்ற நிறுவனங்களும் உள்ளன.

English summary
AstraZeneca's COVID-19 vaccine has reached Phase 3 clinical trials in the United States and is very close to being finalised for approval, US President Donald Trump on Monday announced.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X