வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமலா ஹாரீஸால் அமெரிக்காவில் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.. பராக் ஒபாமா நம்பிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரீஸை அறிவித்ததற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் வரவேற்றுள்ளார்கள்.

Recommended Video

    Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

    இதுகுறித்து அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது ட்விட்டரில் நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:

    ஒவ்வொரு அதிபருக்கும் முதல் முக்கிய வேலையே, தங்களது துணை அதிபரை தேர்வு செய்வதுதான். நீங்கள் அதிபராக பணியாற்றும்போது, பல கடினமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்போது, அதுதொடர்பாக எடுக்கப்படும் முடிவு மக்களை நேரடியாக சென்றடையும் என்பதை மறக்கக் கூடாது. அப்போது நீங்கள் எடுக்கும் முடிவு இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் சம்பந்தப்பட்டதாகும்.

    கமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திராகமலாவை வெறும் இந்தியராக சுருக்கிவிடாதீர்கள்.. அவர் சர்வதேச கனவுகளுடன் கூடியவர்- ஆனந்த் மகிந்திரா

    ஜோ பிடன்

    ஜோ பிடன்

    அந்த சமயத்தில் உங்களுக்கு சரியான ஆலோசனையை சொல்ல ஒருவர் தேவை. அவர்தான் துணை அதிபர். தன்னலம் கருதாமல் பிற உயிர்களையும் கருத்தில் கொள்ளும்படியான ஒருவர்தான் வேண்டும். அந்த வகையில் ஜோ பிடனின் தேர்வு சரியானது. கமலாவை அடுத்த துணை அதிபர் வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலம் ஜோபிடன் போன்ற ஒருவரை அவரே அடையாளம் காட்டியுள்ளார்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ஜோபிடனுக்கு உதவ சிறந்தவர் கிடைத்துவிட்டார். அவர் மூலம் அமெரிக்காவில் தற்போது இருக்கும் பிரச்சினைகள், ஆண்டாண்டாக இருந்து வரும் பிரச்சினைகள் ஆகியவற்றை சமாளிப்பதில் உதவுவார். செனட்டராக இருக்கும் ஹாரீஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். கொடுத்த பணியை எதிர்பார்ப்புக்கு மேல் பூர்த்தி செய்யக் கூடியவர்.

    பாதுகாக்க

    பாதுகாக்க

    அரசியலமைப்பை பாதுகாக்கவும் அனைவரின் உரிமைகளுக்காக போராடுவதிலும் அவர் தனது பணியை செய்துள்ளார். அவரது சொந்த வாழ்க்கை என்பது நான் மற்றும் பலர் சந்தித்ததை போன்றதுதான். எனவே ஒருவர் எங்கிருந்து துணை அதிபர் பதவிக்கு வந்தார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இது உண்மையில் நம் நாட்டுக்கு நல்ல காலம். நாம் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

    ஹிலாரி கிளிண்டன்

    ஹிலாரி கிளிண்டன்

    இதுகுறித்து பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் தனது ட்விட்டரில் கூறுகையில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீஸுக்கு வழங்கப்படும் வாய்ப்பை நான் வரவேற்கிறேன். அவர் ஏற்கெனவே பொதுமக்களின் பிரதிநிதியாகவும் ஒரு தலைவராகவும் தன்னை ஏற்கெனவே நிரூபித்தவர். ஜோ பிடனுக்கு வலுவான துணை அதிபராக கமலா இருப்பார் என்பது எனக்கு தெரியும். ஜோபிடனை தேர்வு செய்தால் தான் கமலா தேர்வாவார். எனவே என்னுடன் சேர்ந்து ஜோ பிடனுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்துள்ளார்.

    English summary
    EX President of America Barack Obama and Hillary Clinton welcomes Kamala Harris as Vice President candidate.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X