வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாண்டாகிளாஸ் வேடம்.. ராக்ஸ்டார் நடனம்.. கிப்டுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு விசிட் அடித்த ஒபாமா

Google Oneindia Tamil News

Recommended Video

    சாண்டாகிளாஸ் வேடத்தில் மருத்துவமனைக்கு விசிட் அடித்த ஒபாமா-வீடியோ

    வாஷிங்டன்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சாண்டாகிளாஸ் வேடத்தில் வாஷிங்டன்னில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ மையத்துக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா திடீர் என வருகை தந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளில் ஏசு கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் வாஷிங்டன்னில் இயங்கி வரும் குழந்தைகளுக்கான மருத்துவ மையத்தில் உள்ள குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட பராக் ஒபாமா விரும்பினார். அதன்படி மருத்துவமனைக்கு வந்த அவர் ராக் ஸ்டார் போல் பாட்டு பாடி நடனம் ஆடிக் கொண்டே வந்தார்.

    மகிழ்ச்சி

    தலையில் சிகப்பு நிறத்தினாலான சாண்டாகிளாஸ் தொப்பியை அணிந்து கொண்டிருந்தார். அவர் வந்தவுடன் குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். சாண்டா கிளாஸ் என்றால் பரிசு இல்லாமலா. அதையும் ஒபாமா கொண்டு வந்தார். அத்தனை குழந்தைகளுடனும் போட்டோ எடுத்துக் கொண்டு பரிசு பொருட்களை கொடுத்தார். ஒவ்வொரு குழந்தையையும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.

    உரக்க பேச்சு

    அப்போது அவர் பேசுகையில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் தன் வீட்டில் இல்லாமல் மருத்துவமனையில் குழந்தைகளை அக்கறையோடு பார்த்துக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள். உங்களை மகிழ்விக்கவே இங்கு வந்தேன் என்றார்.

    பார்வை

    ஒபாமாவின் வருகைக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் அவரது வருகையால் குழந்தைகள் நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருந்ததாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். ஒபாமாவின் வருகை குறித்த வீடியோ டுவிட்டரில் பதிவான 3 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.

    நன்றி

    மருத்துவமனை நிர்வாகத்தின் டுவீட்டுக்கு ஒபாமா பதில் அளித்துள்ளார். அதில் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். என்னை சாண்டாவாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என்று கூறியிருந்தார்.

    பரிசு

    பரிசு

    இதுபோல் கடந்த வாரம் தற்போதைய அதிபர் டிரம்பின் மனைவி மெலியானாவும் இந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவரும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தான் கொண்டு வந்த புத்தகத்தை பரிசாக கொடுத்தார். ஆனால் மெலியானா சாண்டாகிளாஸ் தொப்பியை அணியவில்லை. மாறாக சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தினாலான கோடிட்ட உடையை அணிந்திருந்தார்.

    English summary
    A Santa hat-clad Barack Obama made spending the holidays in the hospital a little cheerier on Wednesday when he surprised young patients and staff at Children’s National hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X