வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெள்ளை மாளிகையின் கூடுதல் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர்கள் நியமனம் - ஜோ பிடன் அறிவிப்பு

வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக இந்திய அமெரிக்கர்களை புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர்களான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக ஜோ பிடன் நியமனம் செய்துள்ளார். இதில் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் புதிய அதிபராக 2021ஆம் ஆண்டு ஆண்டு ஜனவரியில் ஜோ பிடன் பதவி ஏற்க இருக்கிறார். துணை அதிபராக தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்துள்ளார்.

Biden appoints Indian-Americans additional members of White House senior staff

வெள்ளை மாளிகையில் குடியேறப்போகும் ஜோ பிடன், அதிபருக்கான அதிகாரத்துடன் பல்வேறு பதவிகளுக்கும் ஆட்களை அவர் நியமனம் செய்து வருகிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பிடன் வழங்கி உள்ளார். இதில் அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Biden appoints Indian-Americans additional members of White House senior staff

டிரம்ப் சொல்வது பொய்! அமெரிக்க தேர்தலில் பிடன்தான் வெற்றி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ட்விட்டர்! டிரம்ப் சொல்வது பொய்! அமெரிக்க தேர்தலில் பிடன்தான் வெற்றி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ட்விட்டர்!

வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் கவுதம், பிடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Joe Biden has appointed Indian Americans Gautam Raghavan and Vinay Reddy as additional members of the White House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X